சேதன் பகத் முதல் சன்னி லியோன் வரை 'பெர்ஃபார்ம்' செய்த இந்த சவால் பற்றி தெரியுமா? #BeatPeBootyChallange

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் என்ற அழகியும், டைகர் ஷெராஃப் (ஜாக்கி ஷெராஃபோட மகன்தான்!) நடிச்சு 25ம்தேதி ரிலீஸான படம்தான் A Flying Jatt. படத்தை ப்ரமோட் பண்ண, ஊர் ஊராப் போய்ப் பாட்டு பாடறதுல இருந்து பாராசூட் விடறது வரைக்கும் பலவித கொரளிவித்தைகளைப் பண்றதுல நம்ம ஆளுகதான் ஜித்து ஜில்லாடிகளாச்சே.. இவங்க என்ன பண்ணாங்க.. அதுல ஒரு பாட்டை எடுத்துகிட்டாங்க.. அந்தப் பாட்டுதான் ‘Beat Pe Booty”

இந்த மவராசன் டைகர் ஷெராஃப் என்ன பண்ணாப்ல, அந்தப் பாட்ல ரெண்டு ஸ்டெப்பைப் போட்டாப்ல. ஆளு பாலிவுட்ல டான்ஸ்ல பேரெடுத்தவர் வேற... ரெண்டு ஸ்டெப்பைப் போட்டு.. இதான் என்னோட #BeatPeBootyChallenge‬ .. எங்க ஆடுங்க பார்க்கலாம்.. யம்மா.. ஜாக்லினு.. நீதான் இத மேற்கொண்டு கொண்டு போகணும்னுட்டார். 

 

மேல வீடியோ பார்த்தீங்கள்ல? கடசீல மேஜிக்கெல்லாம் வேற!

அவ்வளவுதான். பத்திக்கிச்சு பாலிவுட்டு! ஆளாளுக்கு இடுப்பை ஆட்டி ‘பீட் பே பூட்டி.... பீட் பே பூட்டி’ன்னு ஆடி அப்லோட் பண்ண ஆரம்பிக்க, ரெண்டே நாள்ல #BeatPeBootyChallenge‬ ட்ரெண்டோ ட்ரெண்ட். ரைட்டர் சேதன் பகத்ல ஆரம்பிச்சு சன்னிலியோன் வரைக்கும் ஆடிட்டாங்க. ஆனா, அதுலயும் கலக்கினது ஒருத்தர்.. நம்மாளுதான். ஒவ்வொண்ணா பார்த்துட்டு வாங்க.. யார் அவர்ன்னு சொல்றேன்.. 

 

அர்ஜுன் கபூர், ஷ்ரத்தா கபூர்.. அட! சேதன் பகத்!!

 

 

 

வருண் தவான்

 

ஹூமா குரேஷி

 

 

அட! இங்க பார்யா! அங்க வேலை பாக்கற நேரம்கூட பீட் பே பூட்டி சேலஞ்ச்தானாம்!

 

வாவ்.. ஹ்ரித்திக் ரோஷன்! 

 

 

 

இந்தா பாருங்க.. நம்ம பிரபுதேவா பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சர்யா கூட சேர்ந்து இந்த சேலஞ்ச்ல கலக்கறத..

இப்ப இதோட ஒரிஜினல் வெர்ஷன்ல ஜாக்குலினும், டைகர் ஷெராஃபும் எப்படி ஆடுவாங்கன்னு பார்க்கத் தோணுமே.. இந்தாங்க...

 

-ஃபன்னி லியோன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!