கர்ப்பகால பெண்களுக்கு கரீனா கபூர் சொல்லும் டயட் டிப்ஸ்!

1. கர்ப காலத்தில் பெண்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்து ஆக்டிவாக இருப்பது முக்கியம். எதிர்மறையான சிந்தனையை தவிர்த்திடுங்கள்.

2. என்னைப் போன்ற பிரபலங்கள் உணவு வகையில், இருப்பதிலேயே விலை உயர்ந்த மேலை நாட்டு உணவுகளைத் தான் எடுத்துக் கொள்வார்கள் என்கிற மாயை முதலில் உடையுங்கள். கர்ப்பம் தரித்திருக்கும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் ஊரில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் இதர உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

3. நான் மிகவும் விரும்பி உண்ணும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். எப்பொழுது மும்பையில் இருந்தாலும் ரொட்டி விரும்பி சாப்பிடுவேன். லண்டனில் இருக்கும்போது பாஸ்தா என்னுடைய முதல் சாய்ஸாக இருக்கும். எனவே, கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் திடீரென ஒரு உணவை கட்டாயமாக்காமல் உங்களுக்குப் பிடித்த உணவுகளில் எதை அதிகமாக எடுக்க வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. எப்பொழுதுமே என்னுடைய டயட்டில் கவனத்துடன் இருப்பேன் என்பதால் கர்பகாலத்தில் எனக்கு சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதில் குழப்பம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, எப்போதும் உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள். பிரசவத்திற்கு அது எப்போதும் உதவும்.

5. வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டிருப்பதால், பிரசவத்திற்குப் பிறகு ஒரு வேளை வெயிட் போட்டுவிடுவேனோ என்கிற பயம் எனக்கு இல்லை. அதிகமாக சாப்பிடுவதால் பிரசவத்திற்குப் பிறகு என்னுடைய அழகு குறைந்துவிடுமோ என்கிற பயத்தை தயவு செய்து  தூக்கி எறியுங்கள்.

 

-வே. கிருஷ்ணவேணி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!