வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (20/09/2016)

கடைசி தொடர்பு:17:05 (20/09/2016)

17 வயதில் நான் எதிர்கொண்ட கொடுமைகள்...! கலங்கும் கங்கனா

 

ஹ்ருத்திக் ரோஷன்-& கங்கனா ரணவத் உறவு முறிந்த பிறகு இருவரும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரிப் பூசிக் கொண்டிருப்பது பாலிவுட் அறிந்த சேதி. 

அதையடுத்து போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் லேடி கங்கனா ரணவத், பெண்ணியம் பற்றி விடுத்திருக்கிற ஸ்டேட்மென்ட் லேட்டஸ்ட் வைரல். ஹ்ருத்திக்கும் தனக்கும் இடையில் நடந்ததைப் பற்றி வெளிப்படையாகப் பேச விரும்பாத கங்கனா, பிரச்னைகளை அணுகுவதிலும் தீர்வு காண்பதிலும் காலமும் வயதும் தனக்கு நிறைய பக்குவத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்.

தனது டீன் ஏஜில் சந்தித்த உடல்ரீதியான வன்கொடுமையைப் பற்றி பகிரங்கமான உண்மையையும் போட்டு உடைத்திருக்கிறார்.

"என்னோட 17 வயசுல நான் சந்திச்ச உடல்ரீதியான வன்கொடுமைகள் எனக்குள்ள மரண பயத்தையே தந்திருக்கு. அப்படியொரு சித்ரவதையை நான் அனுபவிக்கக் காரணமா இருந்தவர் செல்வாக்குள்ள ஒரு நபர். அந்த விஷயத்தை அப்படியே மறக்கிறது... அல்லது பிரச்னையாக்கி போலீசுக்கு போறதுனு எனக்கு ரெண்டு ஆப்ஷன்தான் இருந்தது. அப்படி நான் எனக்கு நடந்ததை வெளியில சொன்னா, அது எங்கம்மா, அப்பா உள்பட இந்த உலகத்துக்கே தெரிய வரும். இந்த உலகம் என்னைப் பத்தி எப்படி வேணாலும் பேசும்னு தெரிஞ்சும் நான் போலீசுக்கு போனேன். எஃப்.ஐ.ஆர் ஃபைல் பண்ணினேன்.

இந்த அனுபவம் பெண்ணியம்னா என்னங்கிற கேள்வியை எனக்குள்ள எழுப்பினது. காதலிக்கிற போது காதலன் கொடுக்கிற அன்பளிப்புகளையும், அந்தரங்க உறவின் போதான நினைவுகளையும் சேர்த்து வச்சுக்கிட்டு நாளைக்கு காதலிச்சவன் ஏமாத்திட்டுப் போகும்போது என்கிட்ட ஆதாரங்கள் இருக்குனு காட்டறதுதானா பெண்ணியம்?

யாரோ ஒருத்தனோட சம்மதத்துக்காகவும் அங்கீகாரத்துக்க்காவும் காத்திட்டிருக்கிற ஆளில்லை நான்.

ஒரு ஆணிடம் நோ சொல்ல உரிமை இல்லை என்றால் அது பெண்ணியமும் இல்லை. நான் பெண்ணியவாதியும் இல்லை. நோ என்றால் நோதான்....'' நச்சென சொல்கிறார் மிஸ் ரணவத்.

-வைதேகி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்