Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

85 கிலோ பரிணீதி சோப்ரா! #HBDParineethi

   

2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்... பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸின் மக்கள் தொடர்பு அதிகாரி பரினீதி சோப்ரா தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஆதித்யா சோப்ராவிடம் கொடுக்கிறார். காரணம்... "நான் நடிகையாக விரும்புகிறேன். அதனால், நடிப்புப் பள்ளியில் சேர போகிறேன். "

 யஷ்ராஜ் பிலிம்ஸின் "பான்ட் பாஜா பாராட்" (தமிழில் "ஆஹா கல்யாணம்" ) படத்தின் இயக்குநர் மணீஷ் ஷர்மா, தன்னுடைய அடுத்த படமான "லேடி வெர்சஸ் ரிக்கி பால்" படத்தின் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக பரினீதியை ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். ஆனால், ஆதித்யாவோ அதைக் கேட்டு சிரிக்கிறார். சாதாரண மக்கள் தொடர்பு அதிகாரி, பாலிவுட் ஹீரோயினா? அதுவும் யஷ்ராஜ் நிறுவனத்தின் அறிமுகத்தில்... முடியவே முடியாது.

பரினீதியின் ராஜினாமா கடிதத்தை வாங்கிய ஆதித்யா யோசிக்கிறார். அவரை ஒரு ஆக்டிங் ஆடிஷன் கொடுத்துவிட்டு போக சொல்கிறார். பின்பு, அதைப் பார்க்கிறார். பரீனிதி தன் நிறுவனத்திற்கு தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடுகிறார். காட்சி மாறுகிறது.

 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்... ஒரு தேசிய விருது உட்பட பாலிவுட்டின் பல விருதுகளை வென்றார். ஒரு நாயகி உருவாகிவிட்டார். வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆனால், பரினீதி அவசரப்படவில்லை. தனக்குப் பிடித்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.பரினீதி வழக்கமான பாலிவுட் ஹீரோயின் கிடையாது. 

கட்டையான குரல், நடிப்பதற்கு முன் அவரின் எடை 85 கிலோ. வங்கி அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் அவரின் கனவு. சினிமா, நடிகர்கள், நடிப்பு... இதெல்லாமே ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ வைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார். அது அவருக்குப் பிடிக்காது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை நெருக்கமாக கவனிக்க ஆரம்பித்தார். தன் கஸின் பிரியங்கா சோப்ரா சினிமா மீது காட்டும் ஈடுபாடும், உழைப்பும் அது மீதான பார்வையை அவருக்கு மாற்றியது. தன் சுயத்தை இழக்காமல் சினிமாவில் ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்தது. தன்னை தயார் படுத்திக் கொண்டார். தன் இலக்கை அடைந்தார்.

இன்று தன்னுடைய 27வது பிறந்த நாளை கொண்டாடும் பரினீதி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:

1. ஹரியாணாவில் இருக்கும் அம்பாலா என்ற சின்ன டவுனில் பிறந்தார். அப்பா பவன் சோப்ரா தொழிலதிபர். அம்மா ரீனா சோப்ரா இல்லத்தரசி. இரண்டு சகோதரர்கள் சிவாங், சரஜ்.

2. "பரினீதி" என்றால் விதி என்று அர்த்தம். 80களில் இந்தப் பெயரில் வந்த ஓர் திரைப்படம் பெற்றோருக்குப் பிடித்துவிட, அந்தப் பெயரையே வைத்துவிட்டனர். 

3. சாப்பாட்டுப் பிரியை. பீட்சா என்றால் உயிர். மிக சாதாரணமாக 10 ரொட்டிகளை சாப்பிடுவாராம். நோ டயட்டிங். ஒன்லி ஒர்க் - அவுட். 

4. இசையில்லாமல் பரினீதி இல்லை. இது தான், இவர் தான் என்றெல்லாம் இல்லை. அந்தந்த நேர உணர்வுகளுக்கு ஏற்ற பாடல்களை கேட்பது பிடிக்கும். 

5. அதிகம் பேசுவார். இவர் இருந்தால் தான் செட்டே கலகலப்பாக இருக்கும் என்கிறார்கள் இவரோடு வேலை பார்த்த சக நடிகர்கள். 

6. நடிப்பில் அக்கா பிரியங்கா தான் ரோல் மாடல். அதே சமயத்தில் ராணி முகர்ஜியின் வெறியை. 

7. நடிக்கத் தொடங்கிய ஆறு ஆண்டுகளில் ஆறு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். லேடி வெர்சஸ் ரிக்கி பால் ( Lady VS Ricky Bahl), இஷக்ஜாதே (Ishaqzaade), ஷுத் தேசி ரொமான்ஸ் (Shudh Desi Romance), ஹஸி தோ பஸி (Hasee Toh Phasee), தாவத் இ இஷ்க் ( Daawat E Ishq), கில் தில்( Kil Dil). தற்போது மேரி பியாரி பிந்து (Meri Pyaari Bindu) படத்தில் நடித்து வருகிறார். 

ஆரம்பத்தில் உடல் எடை அதிகம், குரல் சரியில்லை என்று வந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் தன் நடிப்பின் மூலம் பதில் சொன்னார்.

 " நான் ஒரு பாலிவுட் வகை நடிகை கிடையாது. எனக்குப் பிடித்த உடைகள் தான் அணிவேன். எனக்குப் பிடித்த படங்களில் தான் நடிப்பேன். எனக்குப் பிடித்த மாதிரிதான் வாழ்வேன். இதன் காரணமாக எனக்கு வாய்ப்புகள் குறைவதால் எனக்கு கவலையில்லை. ஏனென்றால், எனக்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும். " . என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். 

பரினீதி நிச்சயம் வித்தியாசமானவர் தான். பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரினீதி !!!

- இரா.கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்