தோனி பட இயக்குநரின் குறும்படம்! | Short film of director Neeraj Pandey

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (27/10/2016)

கடைசி தொடர்பு:10:09 (17/11/2016)

தோனி பட இயக்குநரின் குறும்படம்!

'எ வெட்னஸ்டே', 'ஸ்பெஷல் 26', 'பேபி', 'எம்.எஸ்.தோனி' படங்களின் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கியிருக்கும் குறும்படம் 'அவுச்'. மனோஜ் பாஜ்பாய், பூஜா சோப்ரா நடித்திருக்கிறார்கள். காதலர்களான வினய் (மனோஜ் பாஜ்பாய்), ப்ரியா ( பூஜா சோப்ரா) இருவரும் தங்களது ரிலேஷன்ஷிப்பின் மூன்றாவது வருட அனிவர்சரி அன்று சந்தித்துக் கொள்கிறார்கள். இவர்களது காதலில் என்ன பிரச்சனை என்பது பற்றி விரிகிறது இந்தக் குறும்படம். வெளியான மூன்று நாட்களில் பதினேழு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இதற்கு முன் கஹானி இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்து வெளியான 'அஹல்யா', நஸ்ருதீன் ஷா, செர்னாஸ் படேல் நடித்த 'இன்டீரியர் கஃபே நைட்' குறும்படங்களை வெளியிட்ட லார்ஜ்ஷார்ட் ஃப்லிம்ஸ் வெளியிட்டிருக்கிறது. பாலிவுட்டில் இது குறும்பட சீசன் போல. 

 

- பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close