'கோர்ட், கேஸ் எல்லாம் எங்களுக்குச் சாதாரணம்!' - கலாய்த்து கலக்கும் யூ-டியூப் சேனல்கள்- பார்ட்-2 | Comedy youtube channels in India part-2

வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (23/04/2017)

கடைசி தொடர்பு:10:11 (23/04/2017)

'கோர்ட், கேஸ் எல்லாம் எங்களுக்குச் சாதாரணம்!' - கலாய்த்து கலக்கும் யூ-டியூப் சேனல்கள்- பார்ட்-2

யூ-டியூபில் இந்திய அளவில் கலக்கும் காமெடி சேனல்கள் சிலவற்றைப் பார்த்தோம். ஆளாளுக்கு போட்டி போட்டு கலாய்ப்பதால் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே போகிறது. எனவே மக்களே... இது யூ-டியூப் தளத்தில் கலக்கும் காமெடி சேனல்கள் சீசன் 2!

TVF:

TVF - யூ-டியூப் சேனல்

வைரல் உலகைப் பொறுத்தவரை இவர்கள் சீனியர் சிட்டிசன்கள். ஆனாலும் சளைக்காமல் விட்டு வெளுக்கிறார்கள். அர்னாப் கோஸ்வாமியை கிண்டலடிக்கும் இவர்களின் 'Barely Speaking with Arnub' ரக வீடியோக்கள் காட்டுத்தனமாய் ஹிட் அடித்தன. ஷாரூக்கான், அரவிந்த் கெஜ்ரிவால், சேத்தன் பகத் என பல வி.ஐ.பிகள் அந்த ஷோவில் கலந்துகொண்டார்கள். Permanent Roommates என்ற இவர்களின் வெப் சீரிஸும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிறுவனரான அருணப்புக்கு இப்போது நேரம் சரியில்லை. பாலியல் புகார்களில் சிக்கித் தவிக்கிறார். நாம ஒரு ஓரமா இந்த சேனலை மட்டும் பாத்துட்டு போவோம்.

Comedy One:

Comedy One - யூ-டியூப் சேனல்

படங்களை இமிடேட் செய்வது சில சேனல்களின் ஸ்டைல் என்றால் வி.ஐ.பிகளை இமிடேட் செய்வது இவர்களின் ஸ்டைல். சச்சினை இமிடேட் செய்யும் கச்சின் ஐ.பி.எல் மேட்ச் பற்றி பேசுவது, மாதுரி தீட்சித் மேக்கப்பில் பேசுவது என ஏகப்பட்ட வெரைட்டி விருந்து வைப்பார்கள். எல்லாவற்றையும் சீரிஸ் ஸ்டைலில் தருவார்கள். சோஷியல் மீடியா அடிக்ட்களை கிண்டலடித்து இவர்கள் விட்ட வீடியோக்கள் செம வைரல்.

Them boxer shorts:

Them boxer shorts - யூ-டியூப் சேனல்

'சில சமயம் காமெடி பண்ணுவோம், சில சமயம் மொக்கை வாங்குவோம்' என தங்களைப் பற்றி 'தன்னடக்கத்தோடு' சொல்லிக் கொள்ளும் க்ரூப் இது. ஒன்றாகவே படித்து வளர்ந்த நான்கு பெங்களூரு இளைஞர்களால் தொடங்கப்பட்ட சேனல் இது. டிமானிடிஷேசனின்போது ஏ.டி.எம்களில் நடக்கும் காமெடிகளை ஒரு குட்டி வீடியோவில் சொல்ல, மாய்ந்து மாய்ந்து 'ஆமாஞ்சாமி ஆமா' என உச்சு கொட்டினார்கள் சாமானியர்கள்.

BeingIndian:

BeingIndian யூ-டியூப்

ஒரு சின்ன குழுவாய் ஆரம்பித்து இப்போது பெரிய பிசினஸ் சாம்ராஜ்யமாய் வளர்ந்து நிற்கிறது இந்த கேங். செய்தி தளம், யூ-டியூப் சேனல், ஆன்லைன் ஷாப்பிங் என கிளை பரப்பி ரகளை செய்கிறார்கள். மைக்கை மக்களிடம் நீட்டி ஷங்கர் ஸ்டைலில் கருத்துக் கேட்பது இவர்களின் ஸ்பெஷல். கேள்விகள் சில சமயம் விவகாரமாகவும் இருக்கும். ஆனாலும் ஜென் இஸட் தலைமுறை அசராமல் பதில் சொல்லிவிட்டுக் கடக்கிறது.

SnG Comedy:

SnG Comedy யூ டியூப்

மும்பையைச் சேர்ந்த ஆறு ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் இணைந்து உருவாக்கிய சேனல் இது. குழுவாய் குட்டித் திண்ணையில் அமர்ந்து அரட்டையடிப்பது, தனித்தனியாக காமெடி ஷோக்கள் செய்வது என கொட்டிக் கிடக்கிறது காமெடி. வீடியோவிற்கு லட்சம் வியூஸ் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான் இவர்களின் சக்ஸஸ் சீக்ரெட்.

- நித்திஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்