'கோர்ட், கேஸ் எல்லாம் எங்களுக்குச் சாதாரணம்!' - கலாய்த்து கலக்கும் யூ-டியூப் சேனல்கள்- பார்ட்-1 | Comedy youtube channels in india Part One

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (22/04/2017)

கடைசி தொடர்பு:16:53 (22/04/2017)

'கோர்ட், கேஸ் எல்லாம் எங்களுக்குச் சாதாரணம்!' - கலாய்த்து கலக்கும் யூ-டியூப் சேனல்கள்- பார்ட்-1

போர் அடித்தால் ஆதித்யா, சிரிப்பொலி சேனல்கள் பார்ப்பது எல்லாம் அங்கிள்கள் வேலையாகிவிட்டது. ஜியோ புண்ணியத்தில் ஜென் இசட் தலைமுறை யூ-டியூபில் வளைத்து வளைத்து காமெடி ஷோக்களைப் பார்க்கிறது. இதற்காகவே எக்கச்சக்க காமெடி சேனல்கள் இயங்கி வருகின்றன. அந்தந்த சேனல்களுக்கென பிரத்யேக ரசிகர் வட்டங்களும் உருவாகி வருகின்ரன. அப்படி சிரிப்பிற்கு கியாரன்டி அளிக்கும் சில யூ-டியூப் பக்கங்கள் பற்றிய சின்ன அறிமுகம்தான் இது.

(மெள்ள நார்த்ல இருந்து ஆரம்பிச்சு நம்மூர் பக்கம் வருவோம். அதனால... அவசரப்படாதீங்க மக்களே!)

AIB:

AIB - யூ டியூப்

யூ-டியூப்வாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் இது. மற்றவர்களுக்கும் இவர்கள் கொஞ்சம் பரிச்சயம்தான். காரணம், இவர்கள் செய்யும் சேட்டை அப்படி. சச்சின் தொடங்கி சாமானியன் வரை வகைதொகை இல்லாமல் கலாய்ப்பார்கள். பின் கோர்ட்டு, கேஸ் என அலைவதும் உண்டு. ஆனாலும் கொஞ்சம் கூட சளைப்பதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் பிரபலங்களை வைத்து இவர்கள் செய்த 'ரோஸ்ட்' பயங்கர வைரல். ஆனாலும் அடல்ட்ஸ் ஒன்லி கன்டென்ட் தூக்கலாக இருந்ததாக புகார்கள் எழ, கொஞ்சம் நாள் தலைப்புச் செய்திகளில் அடிபட்டார்கள். பாவம்!

EIC:

EIC - யூ-டியூப்

'ஈஸ்ட் இண்டியா காமெடி' என்பதன் சுருக்கம்தான் ஈ.ஐ.சி. ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் சிலர் சேர்ந்து 2012-ல் தொடங்கிய சேனல் இது. ஸ்டேண்ட் அப் காமெடியில் டாபிக்கல் டச் கொடுப்பது இவர்கள் ஸ்டைல். செட் போட்டு வீடியோக்கள் எடுப்பது தவிர பல நகரங்களுக்கும் பயணம் சென்று ரசிகர்களை வயிறு கலங்க வைப்பார்கள். தண்ணீர்ப் பஞ்சம், காற்று மாசுபாடு என சீரியஸ் விஷயங்களைக் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் தரவு என கலந்துகட்டிச் சொல்வதால் இவர்களுக்குக் குவிகிறது லைக்ஸ்.

The Timeliners:

The Timeliners

மற்றவர்களை ஒப்பிடும்போது இவர்கள் சூப்பர் ஜுனியர். இப்போதுதான் மூன்று வயதைத் தொட்டிருக்கிறார்கள். வீடியோக்கள் எண்ணிக்கையும் கம்மிதான். ஆனால் எல்லாமே 'நச்' ரகம். ஸ்கூல் காமெடி, காலேஜ் காமெடி என பழகிய சப்ஜெட்களில் வெரைட்டி காட்டுவது இவர்களின் ஸ்டைல். சமீபத்தில் காதலர் தினத்திற்கு இவர்கள் ரிலீஸ் செய்த வீடியோ தெறி ஹிட். இவர்களின் எந்த வீடியோவுமே ஐந்து நிமிடங்களைத் தாண்டுவதில்லை. ஆனால் சூப்பர் ஓவரில் சிக்ஸர்கள் அடிக்கும் சிகாமணிகள். கெத்துதான்!

Bollywood Gandu:

Bollywood Gandu

மொக்கைப் படங்களையே தொடர்ந்து பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? 'இனி இந்தப் பக்கமே தலை காட்டக்கூடாது' என்பதுதானே. ஆனால் கரன் தல்வார் என்பவருக்கு வேறு ஐடியாக்கள் இருந்தன. பாலிவுட் படங்களை 'வெச்சு' செய்வதற்காகவே இந்தச் சேனலை தொடங்கினார். சின்ன சின்ன ஓவியங்கள். கிராஃபிக்ஸ்கள் வழியே கிழித்துத் தொங்கவிடுவதுதான் இந்தக் குழுவின் வேலை. பாலிவுட் பிரபலங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வைத்து செய்கிறார்கள்.

Shudh desi ending:

Shudh desi ending

இதுவும் பாலிவுட்டை ஜாலியாய் வறுத்தெடுக்கும் சேனல்தான். நம் ஊர் லொள்ளு சபா பாணியில் ஒவ்வொரு படத்தையும் நக்கலடித்து வீடியோ விடுவார்கள். முழுக்க முழுக்க கிராஃபிக்ஸினால் ஆன வீடியோக்கள் அவை என்பது ஸ்பெஷல் அம்சம். இந்தியில்தான் இருக்குமென்றாலும் வழக்கமாய் பாலிவுட் படங்கள் பார்ப்பவர்களுக்கு இங்கே காமெடி அன்லிமிடெட்.

இன்னும் சில கலாய் காமெடி சேனல்களைப் பற்றிய அறிமுகத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்