Published:Updated:

" 'பிரேமம்' பாய்ஸ் ஆர் பேக், ரவிதேஜாவின் ட்ரிபிள் ஆக்‌ஷன், தலதளபதி வில்லனின் 'ஜங்கிளீ'..! #WoodBits

அலாவுதின் ஹுசைன்
" 'பிரேமம்' பாய்ஸ் ஆர் பேக், ரவிதேஜாவின் ட்ரிபிள் ஆக்‌ஷன், தலதளபதி வில்லனின் 'ஜங்கிளீ'..! #WoodBits
" 'பிரேமம்' பாய்ஸ் ஆர் பேக், ரவிதேஜாவின் ட்ரிபிள் ஆக்‌ஷன், தலதளபதி வில்லனின் 'ஜங்கிளீ'..! #WoodBits

'பிரேமம்' அல்ஃபோன்ஸ் புத்திரனின் அடுத்தப் படம்

'நேரம்', 'பிரேமம்' என இரண்டு படங்களிலேயே தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். 'பிரேமம்; வெளியாகி இரண்டு வருடங்களுக்குமேல் ஆகிய நிலையில் இவரது இயக்கத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது. அல்ஃபோன்ஸ் தயாரிப்பாளாராகக் களம் இறங்குவதாக ரசிகர்களுக்கு இன்னோர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மோசின் காசிம் இயக்கத்தில் 'நேரம்', 'பிரேமம்' படங்களில் நடித்த சிஜூ வில்சன், ஷரஃபுதின், கிருஷ்ணா ஷங்கர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அதேபோல, 'நேரம்' 'பிரேமம்' படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசனே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அல்ஃபோன்ஸ் புத்திரன் வெளியிட்டார்.     

ராக் நடிக்கும் புது படம் 'ஸ்கை ஸ்க்ராப்பெர்'


ரஸ்லிங் ரசிகர்களால், 'ராக்' என அறியப்படுபவர், டுவைன் ஜான்சன். இவரது நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து  யூனிவர்சல் ஹிட் ஆனது,  'ஜுமாஞ்சி - வெல்கம் டு தி ஜங்கிள்' திரைப்படம். தற்போது ராஸன் தர்பெர் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் 'ஸ்கை ஸ்க்ராப்பெர்'. இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் டுவைன் ஜான்சன். இப்படத்தைத் தொடர்ந்து டிஸ்னீ தயாரிப்பில் 'ஜங்கிள் க்ரூஸ்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்குகிறது. 

சென்சாரில் சிக்கிய 'ஐயாரி'

'ஏ வெட்நெஸ்டே', 'ஸ்பெஷல் 26', 'பேபி', 'தோனி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை  இயக்கித் தயாரித்தவர், பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே. பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட கதைகளையே திரைப்படங்களாக எடுப்பதில் 'கிங்' இயக்குநர் நீரஜ் பாண்டே. தற்போது, ராணுவத்தில் நடக்கும் ஊழலை மையமாகக் கொண்டு நீரஜ் இயக்கித் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐயாரி'. படம் ராணுவத்தைப் பற்றிப் பேசியிருப்பதால், பாதுகாப்புத் துறை பார்த்து ஒப்புதல் அளித்த பின்னரே தணிக்கைச் சான்று வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து படத்தைப் பார்த்த பாதுகாப்புத் துறையினர், காரணங்களைக் குறிப்பிடாமல், பல மாற்றங்களைத் தெரிவித்துள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ரா, மனோஜ் பாஜ்பாயி, ரகுல் பரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, அந்தத் தேதியில் 'ஐயாரி' வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே, இப்படம் ஜனவரி 26- ம் தேதி வெளிவருவதாக இருந்தது. நீரஜின் படங்கள் தமிழில் 'உன்னைப்போல் ஒருவன்', 'தானா சேர்ந்த கூட்டம்' என ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடிக்கும் 'மாஸ் மஹாராஜா'


டோலிவுட்டில் 'மாஸ் மஹாராஜா' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர், ரவிதேஜா. 'கிக்', 'விக்ரமார்குடு' போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்திருக்கிறார், ரவிதேஜா. இவருடன் சேர்ந்து ஏற்கெனவே 'துபாய் சீனு', 'வெங்கி' என வெற்றிப் படங்களை இயக்கியவர் சீனு வைட்லா. இவர்கள் இருவரும் இணையும் அடுத்த படத்திற்கு, 'அமர் அக்பர் ஆண்டனி' எனப் பெயரிடப்படலாம் என சமீபத்தில் ரவிதேஜா தெரிவித்திருந்தார். இப்படத்தில் இருக்கும் அமர், அக்பர், ஆண்டனி ஆகிய மூன்று கதாபாத்திரங்களையும் இவரே ஏற்று நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தல தளபதி வில்லனுடன் யானை நடிக்கும் 'ஜங்கிளீ'

'பில்லா-2' அஜித்குமார், 'கத்தி' விஜய் என இருவருக்கும் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் தற்போது பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் 'தி மாஸ்க்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சக் ரசல் தற்போது போலா என்ற யானையை வைத்து இயக்கிவரும் இந்தித் திரைப்படம் 'ஜங்கிளீ'. ஒரு யானைக்கும் மனிதனுக்கும் உண்டான உறவுகளைப் பற்றிக் கூறும் படமாக உருவாகும் இதில், வித்யுத் ஹீரோவாக நடிக்கிறார். நேற்று வெளியிடப்பட்ட டீஸரில் படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.