Published:Updated:

கில்ஜி டூ கல்லி, மகேஷ்பாபுவின் அரசியல், டாம் க்ரூஸின் ஆக்ஷன்

கில்ஜி டூ கல்லி, மகேஷ்பாபுவின் அரசியல், டாம் க்ரூஸின் ஆக்ஷன்
கில்ஜி டூ கல்லி, மகேஷ்பாபுவின் அரசியல், டாம் க்ரூஸின் ஆக்ஷன்

சல்மான் கானின் 'டபாங் 3'ல் நடிக்கும்  'லிங்கா' பட கதாநாயகி'

சல்மான் கான் நடிப்பில் 2010ல் வெளிவந்த 'டபாங்' இந்தித் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அர்பாஸ் கான் இயக்கிய 'டபாங்' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சிம்பு நடிக்க 'ஒஸ்தி' எனத் தமிழிலும், பவன் கல்யாண் நடிக்க 'கப்பர் சிங்' எனத் தெலுங்கிலும் வெளியானது. மீண்டும் அதே குழு இணைந்து 2012ல்  'டபாங்-2' என்ற வெற்றிப் படத்தையும் தந்தனர்.  சல்மான் கானுடன் இரண்டு படங்களிலும் ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. ஆறு வருடங்கள் கழித்து அர்பாஸ் கான் இயக்க 'டபாங் 3' உருவாகிறது என்ற செய்தி வெளியாக, இப்படத்திற்கு புதிய நாயகி தேர்வு செய்யப்படலாம் எனப் பேசப்பட்டது. சமீபத்தில் அர்பாஸ் கான் அளித்த பேட்டியொன்றில், சோனாக்‌ஷி சின்ஹாதான் நாயகி எனவும், படம் 2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். ஒஸ்தி மாமே!!!

கில்ஜி டூ கல்லிபாய்

பெரும் சர்ச்சைகளுடன் ஜனவரி 25ஆம் தேதி  வெளிவந்துள்ள திரைப்படம் 'பத்மாவத்'. இத்திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அப்படத்தில் அலாவுதின் கில்ஜியாகக் கலக்கியிருக்கும் ரன்வீர் சிங்கை ஏகபோகமாக பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் அவர் நடித்திருந்த கில்ஜி கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஆஜானபாகுவாக உடற்கட்டை வளர்த்து வைத்திருந்தார். தற்போது ரன்வீர் சிங் தனது  'கல்லி பாய்' படத்திற்காக முற்றிலும் உடல் எடையைக் குறைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் ட்வீட்டிட்டிருந்த இந்தப் புகைப்படம் அனனவரையும் இவரது கலைப்பசியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட்டில் இன்னொரு சல்மான்

தமிழ் மலையாளம் என இளம் பெண்களைத் தன் நடிப்பால் வசிகரித்தவர், துல்கர் சல்மான். தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்து வந்த துல்கர்,  மணிரத்னம் எடுத்த 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ்பட ரசிகர்களிடம்  ரீச் ஆனார். இத்துடன் நிறுத்தாமல்  தற்போது பாலிவுட்டில் இர்ஃபான் கான், க்ரித்தி கர்பந்தாவுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ' கர்வான்'. இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருடன் துல்கர் சல்மான் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஸோயா தி ஃபேக்டர்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகயிருக்கிறது என சோனம் கபூர் ட்வீட்டிட்டிருக்கிறார்.

முதல்வராக தெலுங்கு சூப்பர் ஸ்டார்

ஏ.ஆர்.முருகதஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்" படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆந்திர சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தான் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பை ஆடியோ டீசராக வெளியிட்டுள்ளார். முதல்வராகப் பதவியேற்க உறுதிமொழி கூறுவதுபோல் இருக்கும் மகேஷ் பாபுவின் அந்த ஆடியோவில் வரும் முதல் மூன்று வார்த்தையான 'பாரத் அனே நேனு' என்பதுதான் இப்படத்தின் டைட்டில். தமிழகத்தில் ஹீரோக்கள் முதல்வராக நினைக்கும் நேரத்தில் அங்கே தன் படத்தின்மூலம் அதை நிஜமாக்கியுள்ளார் மகேஸ்பாபு. கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். படம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகசக்கார டாம் க்ரூஸ்

1996-ஆம் ஆண்டு ஆரம்பித்து கடந்த 20 வருடங்களில்  இது வரை 5 அத்தியாயங்களாக வெளிவந்துள்ள திரைப்படம் 'மிஷன் இம்பாஸிபில்'. டாம் க்ரூஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ரசிகர் கூட்டம் இப்படத்தை ரசித்து வரவேற்றனர். 'மிஷன் இம்ன்பாஸிபில்' பெயரிலேயே மூன்று பாகங்கள், 'கொஸ்ட் ப்ரொட்டோகால்', 'ரோக் னேஷன்' என்ற பெயரில் வெளியானது... என ஐந்து பாகங்களைத் தொடர்ந்து 'மிஷன் இம்பாஸிபில் 6 -  ஃபால் அவுட்' என அடுத்த பாகத்திற்கான டைட்டில் அறிவிக்கபட்டது. சமீபத்தில் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் டாம் க்ரூஸ் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் போட்டோக்களை தனது சமூக வளைத்ளப் பக்கங்களில் வெளியிட்டார். படம் ஜூலை 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.