Published:Updated:

மணிகர்னிகாவுக்கான தடை குரல்கள், யுவன்-செல்வராகவன் மேஜிக் ஹிட் #QuickSeven

மணிகர்னிகாவுக்கான தடை குரல்கள், யுவன்-செல்வராகவன் மேஜிக் ஹிட் #QuickSeven
மணிகர்னிகாவுக்கான தடை குரல்கள், யுவன்-செல்வராகவன் மேஜிக் ஹிட் #QuickSeven

யக்குநர் பா.இரஞ்சித்துடன் சேர்ந்து, சந்தோஷ் நாராயணன் 'காலா' படத்துக்கான பின்னணி இசை வேலைப்பாடுகளை ஆரம்பித்துவிட்டார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், தனுஷின் அடுத்த படமான 'வடசென்னை' படத்துக்கான இசையமைப்பும் பிஸியாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் தனுஷ் ஆகிய இருவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். 'இப்படத்தில் இசையைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் தனக்கான மொத்த சுதந்திரத்தையும் அளித்துள்ளனர். அவ்வகையில் மிகவும் பெருமைப்படுகிறேன்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கூடிய விரைவில் இப்படத்தில் வரும் பாடல் காட்சிகளுக்கான விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.   

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சரத்குமாரின் அடுத்தபடம் 'பாம்பன்'. இதில், 'சரத்குமாருக்கு ஜோடியாக எந்தவொரு ஹீரோயினும் இல்லை. மேலும் இப்படத்தில் காதல் காட்சிகள் ஏதும் இல்லை' என்று படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இது புராண கதைகளை மையமாகக் கொண்டுள்ள படம் என்றும், இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிட்டுக் கூறும்படியான சிஜி க்ராபிக்ஸ் காட்சிகள் இடம் பெரும் என்றும் தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இதற்கு இசையமைக்க இருக்கிறார். வரும் ஜூலை மாதம் இதற்கான தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. 

'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பிறகு பிரிந்த யுவன்-செல்வராகவன் கூட்டணி, மறுபடியும் 2017- ம் ஆண்டு 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மூலம் ஒன்றிணைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'சூர்யா 36' படத்தில் மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க இருக்கும் நோக்கத்தில் கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து வேலை செய்து வந்தனர். இறுதியில், பாடல்கள் நன்கு வெளிவந்த சந்தோஷத்தை யுவனும், செல்வராகவனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர். யுவன் - செல்வாவின் பாடலைக் கேட்க இவர்களின் ரசிகர்கள் தீவிர வெயிட்டிங்! 

ஜான்சிராணி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் கங்கனா ரனாவத் நடிக்கும் 'மனிகர்னிகா'. சென்றமாதம் வெளியான 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதுபோல, தற்போது இப்படத்துக்கும் பிராமண அமைப்பு சார்பாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தில் ஜான்சி ராணி ஒரு வெள்ளையரைக் காதலிப்பதுபோல் காட்சிகள் இருக்கின்றன என்ற கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள படக்குழு, அப்படியான காட்சிகள் ஏதும் படத்தில் இல்லை என்று பதிலளித்து வருகிறது. .

பாரதிராஜா இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளிவந்த 'புதுமைப்பெண்' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகரன். இவரது மகள் 'ஷிவானி' தற்போது தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடிக்கும் தமிழ்ப் படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்க இருக்கிறார். பிரபல பின்னணிப் பாடகர் க்ரிஷ் இதற்கு இசையமைக்க உள்ளார். இதுகுறித்து விஷ்ணு விஷால், "விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் அறிமுகமாக உள்ள ஷிவானியை வரவேற்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ரி மற்றும் ஆஷ்னா சவேரி நடித்து வரும் 'நாகேஷ் திரையரங்கம்' வரும் பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் 'அகடம்' என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் இயக்கி கின்னஸ் சாதனை படைத்த முகமது இஷாக் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை 16 இடங்களில் வெட்டி எடுத்து தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் இஸாக் கூறியதாவது, "தமிழில் ஏகப்பட்ட பேய் படங்கள் வந்திருந்தாலும், அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டதுதான் நாகேஷ் திரையரங்கம். திரையரங்கில் பேய் இருப்பது போன்ற திரைக்கதை இதில் அமைக்கப்பட்டுள்ளது." என்று கூறினார்.

டந்த 9-ந் தேதி அக்‌ஷய்குமார் நடித்து வெளியான 'பேட்மேன்' திரைப்படத்தை பாகிஸ்தான் மத்திய தணிக்கை வாரியம் அந்நாட்டில் வெளியிடத் தடை விதித்துள்ளது. இப்படத்தின் கதை பெண்களின் மாதவிடாய் நாள்களில் உபயோகிக்கும் நாப்கினை வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், மதத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராக உள்ளது என்று காரணம் தெரிவித்துள்ளனர். மேலும், அந்நாட்டுப் பட விநியோகிஸ்தர்களும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதுவரை ஒட்டப்பட்ட போஸ்டர்களும் திரையரங்குகளிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன. 

அடுத்த கட்டுரைக்கு