Election bannerElection banner
Published:Updated:

ஷாருக் கானுடன் இணைந்த மாதவன்!

ஷாருக் கானுடன் இணைந்த மாதவன்!
ஷாருக் கானுடன் இணைந்த மாதவன்!

ஷாருக் கானுடன் இணைந்த மாதவன்!

மாதவன் நடித்த 'தனு வெட்ஸ் மனு', தனுஷின் 'ராஞ்சனா' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய், தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம், 'ஜீரோ'. இந்தப் படத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்துவருகிறார். அதுவும், அவர் இந்தப் படத்தில் குள்ள மனிதனாக நடிப்பதுதான் ஸ்பெஷல். மேலும், கத்ரீனா கைஃப், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து, சல்மான் கான், கஜோல், ஆலியா பட், தீபிகா படுகோன், கரிஷ்மா கபூர், ராணி முகர்ஜி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வரவிருக்கின்றனர். மறைந்த நடிகை ஶ்ரீதேவி இறுதியாக நடித்த படமும் இதுவே. இந்த மெகா ஸ்டார் பட்டியலில் மாதவனும் இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் மாதவன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் ஷாருக் கானுடன் முதன் முறையாக இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு. ஏராளமான பாலிவுட் செலிபிரிட்டிகள் ஒரே படத்தில் இருப்பதாலும், ஷாரூக் கான் வித்தியாசமான லுக்கில் நடிப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது. 
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு