Published:Updated:

கொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி இருக்கிறான் சூப்பர்ஹீரோ ? #BhaveshJoshiSuperhero

கொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி  இருக்கிறான் சூப்பர்ஹீரோ ? #BhaveshJoshiSuperhero
கொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி இருக்கிறான் சூப்பர்ஹீரோ ? #BhaveshJoshiSuperhero

பெரும்பாலும் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் டிசி காமிக்ஸில் வரும் கதாபாத்திரங்களும் கதைக்களமும் பெரியவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். பாவேஷ் ஜோஷி சூப்பர்ஹீரோ திரைப்படமும் அப்படிப்பட்டது தான். இந்த திரைப்படத்தில் வரும் சூப்பர்ஹீரோ டிசி காமிக்ஸ் ஹீரோ போல மாஸாக இருக்கிறான் என்று  இந்த திரைப்படத்தின் ஹீரோவே ஒரு காட்சியில் சொல்கிறார். #BhaveshJoshiSuperhero 

பாவேஷ் ஜோஷி, சிக்கந்தர், ரஜாத் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களான மூவருக்கும் நாட்டில் நிலவும் ஊழலும், மக்கள் செய்யும் சின்ன சின்ன சட்ட விதிமீறல்களையும் கண்டாலே,  ‘அந்நியன்’ பட அம்பி போல கோபம் வருகிறது. அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்குகொண்டு தங்கள் ஜனநாயக கடமையாற்றுகிறார்கள். போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக ‘வாண்டட்’ ஆக கைதாகிறார்கள். ’இன்சாஃப் டிவி’, என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்குகிறார்கள். ’இன்சாஃப்’ என்றால் நீதி. 

கொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி  இருக்கிறான் சூப்பர்ஹீரோ ? #BhaveshJoshiSuperhero

அதற்காக பாவேஷ் ஜோஷியும், சிக்கந்தரும் ‘இன்சாஃப் மேன்’ ஆகிறார்கள். தலை மீது பெரிய கவர் ஒன்றைக் கட்டிக்கொண்டு சாலையோரம் சிறுநீர் கழிப்பவர்களையும், மரம் வெட்டுபவர்களையும், பள்ளிக்கூடத்தை பங்க் அடிக்கும் சிறுவர்களையும் துரத்தியடிப்பதை வீடியோவாக போட்டு லைக்ஸ் அள்ளுகிறார்கள். காலப்போக்கில், சிக்கந்தரும் ரஜாத்தும் தங்கள் அன்றாடப் பணிகளுக்கு சென்றுவிட, பாவேஷ் ஜோஷி மட்டும் ‘இன்சாஃப் டிவி’யைத் தொடர்ந்து நடத்துகிறான். 

மும்பை நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் குழாய்களில் இருந்து, தண்ணீர் திருடப்படுவதைக் கண்டுபிடிக்கும் பாவேஷ் ஜோஷி அதனை அம்பலப்படுத்துகிறான். அதன் விளைவாக, தொடரும் நிகழ்வுகளில் கொல்லப்படுகிறான். 

கொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி  இருக்கிறான் சூப்பர்ஹீரோ ? #BhaveshJoshiSuperhero

அமெரிக்கா சென்றது போல நாடகமாடி, நண்பனின் இறப்புக்கு பழிவாங்க சூப்பர்ஹீரோ அரிதாரம் பூசுகிறான் சிக்கந்தர். சூப்பர்ஹீரோவுக்கு இறந்த நண்பன் பாவேஷ் ஜோஷியின் பெயரையே சூட்டுகிறான். எதிரிகளைப் பழிவாங்கும் முயற்சியில் சிக்கந்தர் வென்றானா என்பது மீதிக்கதை. 

இந்த திரைப்படத்தை இயக்கியவர் விக்ரமாதித்ய மோட்வானே. இவரது முந்தைய படங்களான உடான், லூடெரா, ட்ராப்ட் (Trapped) ஆகியவை பாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களாக கருதப்படுபவை. அவரிடம் இருந்து வெளிவரும் சூப்பர்ஹீரோ திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி இருக்கிறார் விக்ரமாதித்ய மோட்வானே. 

மோட்வானேவுடன் இணைந்து அனுராக் காஷ்யப், அபய் கோரானே ஆகியோர் திரைக்கதையை எழுதியிருக்கின்றனர். வித்தியாசமான திரைக்கதைகளால் பிரபலமான அனுராக் காஷ்யப்பின் கைவண்ணம் இந்த படத்தில் எங்கேயும் தெரியவில்லை. இரண்டாம் பாதியின் பல காட்சிகளை அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இந்த படம்  சூப்பர்ஹீரோ திரைப்பட ரசிகர்களுக்கு நிச்சயம் பல திரைப்படங்களை நினைவுபடுத்தும். 

கொஞ்சம் பேட்மேன் ... கொஞ்சம் முகமூடி... கொஞ்சம் டேர்டெவில்... எப்படி  இருக்கிறான் சூப்பர்ஹீரோ ? #BhaveshJoshiSuperhero

பலம் இல்லாத சாதாரண ஹீரோ சூப்பர்ஹீரோவாக ட்ரைனிங் எடுப்பதை இதற்கு முன் ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்திலேயே கண்டு இருக்கிறோம். இந்தியாவைச் சேர்ந்த சூப்பர்ஹீரோ என்பதால், மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தைப் போல பல இடங்களில் தோன்றியது. சண்டைக் காட்சிகள் மார்வெல் தொடரான ‘டேர்டெவில்’ என்ற சூப்பர்ஹீரோவினுடையது போல இருக்கின்றன. 

பாவேஷ் ஜோஷியாக நடித்திருந்தாலும் ப்ரியன்ஷு பஞ்ஞுலி இரண்டாவது ஹீரோ தான். ஹர்ஷவர்தன் கபூர் சிக்கந்தராகவும்,  சூப்பர்ஹீரோவாகவும் மிரட்டியிருக்கிறார். கொஞ்சம் துல்கர் சல்மானின் சாயலில் இருக்கும் இவர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகன்; நடிகை சோனம் கபூரின் தம்பி. 

பாவேஷ் ஜோஷி சூப்பர்ஹீரோ திரைப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அதன் ஒளிப்பதிவு. மும்பையின் தெருக்களையும், சாலைகளையும் மிக அழகாக பதிவு செய்ததோடு, ஒரு சூப்பர்ஹீரோ படத்திற்கு உரித்தான வேகத்தோடு இயங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த் தவான். பின்னணி இசை அமித் த்ரிவேதியினுடையது. சேஸிங் சீன்களிலும், ஸ்டன்ட் சீன்களிலும் அவரது இசை வேகத்தைக் கூட்டுகிறது. 

ஊழல், தேச விரோதி முத்திரை, குடிநீர் திருட்டு எனப் பல விஷயங்களை மிகச் சாதாரணமாக கையாண்டிருக்கிறது இந்த திரைப்படம். எனினும் பாவேஷ் ஜோஷி என்ற உயர்சாதிப் பெயரைத் தான் சூப்பர்ஹீரோவுக்கு சூட்ட வேண்டுமா என்று நெட்டிசன்கள் இந்த படத்தின் டைட்டில் வெளிவந்ததில் இருந்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

இரண்டரை மணி நேரங்களுக்கும் மேலாக ஓடும் இந்த படத்தின் பல காட்சிகளை வெட்டி, கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால், பாவேஷ் ஜோஷி சூப்பர்ஹீரோ அனைவரையும் கவர்ந்திருப்பான்.                    

அடுத்த கட்டுரைக்கு