Published:Updated:

ராணி லக்ஷ்மி பாயாக, ஓர் இயக்குநராக கங்கனா செம... படமாக #Manikarnika எப்படி?

கார்த்தி

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்து தன் நாட்டைக் காப்பாற்ற போராடிய ராணி லக்ஷ்மி பாயின் வரலாற்றைச் சொல்கிறது `மணிகர்ணிகா'. ஆனால், அதன் ஹீரோயிசங்களும், புனைவுகளும்தான்...

ராணி லக்ஷ்மி பாயாக, ஓர் இயக்குநராக கங்கனா செம... படமாக #Manikarnika எப்படி?
ராணி லக்ஷ்மி பாயாக, ஓர் இயக்குநராக கங்கனா செம... படமாக #Manikarnika எப்படி?

இத்திரைப்படம் முதல் கிரெடிட்டிலேயே இது வரலாற்றுப் படம் மட்டுமே அல்ல. மணிகர்ணிகா என்னும் ராணி லக்ஷ்மி பாய்க்காகச் சில ஹீரோயினிச மாயாஜாலங்களையும் சந்தடி சாக்கில் #Manikarnika வில் சேர்த்திருக்கிறோம் என்னும் டிஸ்க்ளைமருடன் ஆரம்பிக்கிறார்கள். 

மணிகர்ணிகாவை எப்படி அவரது ஊரில் மதிக்கிறார்கள். மணிகர்ணிகா எப்படி ஆண்களுடன் சண்டை போடுகிறார். மணிகர்ணிகா எப்படி ராஜா கங்காதர ராவ் திருமணம் செய்துகொண்டார். மணிகர்ணிகா எப்படி ராணியானார். மணிகர்ணிகா எப்படி ஹர ஹர மஹாதேவ்கி மட்டுமே சொல்லி க்வாலியரைக் கைப்பற்றினார். மணிகர்ணிகா எப்படி ஆங்கிலர்களுக்கே ஆங்கிலேய வரலாற்று கிளாஸ் எடுத்தார். மணிகர்ணிகா எப்படி ஆங்கிலேயர்களை வீழ்த்தினார். மணிகர்ணிகா எப்படி ஜெனரல் ஹக் ரோஸ் கனவில் பல நாக்குகளுடன் காளியாக வந்தார். என ராணி லக்ஷ்மிபாய் பயோபிக் அளவுக்கு ஒரு வீர தீர சாகச புளங்காகிதத் துதிபாடும் பயோபிக்கை சமீபத்தில் பார்த்ததில்லை. இந்த வாரம் வெளியான தாக்கரே படத்தில் பார்த்த அதே துதிகள்தான். என்ன போர் என்பதால் இன்னும் பிரமாண்டமாகச் சுற்றி இருக்கிறார்கள். வரலாறு வேறு வரலாற்றுப் புனைவு வேறு என்றாலும், இப்படி டஜன் கணக்கில் சுற்றுவதெல்லாம் சற்றே தலை சுற்ற வைக்கிறது.

ராணி லக்ஷ்மி பாயாக, ஓர் இயக்குநராக கங்கனா செம... படமாக #Manikarnika எப்படி?

ஒரு பெர்ஃபாமராக கங்கனா ரனாவத் டாப் கிளாஸ். முடியைச் சுருட்டிவிட்டு குழந்தையுடன் நடக்கும் அந்த இன்டெர்வல் காட்சியிலேயே அத்தன கூஸ்பம்ப்ஸ். சிறுவயதில் கணவனை இழந்த பெண்ணுக்கு குங்குமம் வைத்துவிடுவது, கணவனை இழந்தவுடன் மொட்டை எல்லாம் அடிக்க முடியாது எனக்கு வேறு வேலை இருக்கிறது என கம்பீரமாய் நடப்பது எனப் புரட்சிகளில் மிளிர்கிறார் கங்கனா. ஆனால், ஆங்கிலேயரின் கீழ்படிந்து ஒருவர் இருக்கிறார் என்பதைக் காட்டுவதற்காக, அவருக்கு வளையல் அணிவித்து இருப்பதெல்லாம், எந்த வகையிலான புரட்சி கங்கனா!. அதுமட்டுமன்றி வளையலை ஓர் அவமானச் சின்னமென நிறுவி எதைச் சாதிக்க முயல்கிறீர்கள். பயோபிக் என்பதால் அனைத்துக் காட்சிகளிலும் கங்கனா இருப்பது சரி என்றாலும், அது அதீத துதி பாடலால் ஒரு கட்டத்துக்கு மேல் ராஜாமாதா போதும் மா என்கிற நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதிலும் ஒற்றை ஆளாய் க்வாலியரில் செய்யும் வீர தீரமும், ஆங்கிலேயர்களுக்குக் காட்டும் கருணையுமெல்லாம் எந்த விதத்தில் சேர்ப்பது. அதிலும் வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி செய்த காட்சிகளையும் சுட்டுக் காட்சிகள் அமைத்திருப்பது அட்டகாஷ். 

ராணி லக்ஷ்மி பாயாக, ஓர் இயக்குநராக கங்கனா செம... படமாக #Manikarnika எப்படி?

தெலுகு பிளாக்பஸ்டர்களின் நாயகரான ராஜமௌலியின் தந்தை விஜேந்திர பிரசாத் மணிகர்ணிகாவுக்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். வானம், NTR படங்களை இயக்கிய க்ரிஷ், கங்கனா ரனாவத்துடன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் முதல் கிரெடிட் கங்கனாவுக்கு வருவதும் சர்ச்சையாகி இருக்கிறது. கதையிலும், திரைக்கதையிலும்தான் இத்தனை சொதப்பல்கள். ஷங்கர், இஷான் லாய் கூட்டணி படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள்.  

படத்தில் சாம்பிளுக்காக இரு காட்சிகளை கீழே எழுதியிருக்கிறேன். 

ஸ்பாய்லர்:

ராணி லக்ஷ்மி பாயாக, ஓர் இயக்குநராக கங்கனா செம... படமாக #Manikarnika எப்படி?


காட்சி 1 : படத்தின் ஆரம்பக் காட்சி

ஃப்ரீ ஹேர் விட்டபடி, தன் அழகிய சுருள் முடியுடன், Brave அனிமேஷன் திரைப்படத்தில் வரும் கிட்டத்தட்ட அதே காஸ்டியூமுடன் நிற்கிறார் ராணி லக்ஷ்மி பாய் (கங்கனா ரனாவத்). அப்போது அவரின் பெயர் மணிகர்ணிகா. செல்லமா மனு. Braveல் வருவது போலவே, வில் அம்பும் வைத்திருக்கிறார். ஆனால், இதில் ராணி லக்ஷ்மி தாக்குவது ஒரு புலியை. காட்டில் வாழும் புலி. ஊருக்குள் வந்துவிடுவதால். ஒரு ஆட்டைக் கடிக்கும் முன்னர் ஊர் மக்கள் முன்னிலையில் புலியின் மீது அம்பு எய்துகிறார். ஆனால், புலியை அவர் சாகடிக்கவில்லை. மயக்க மருந்து தடவிய அம்பை எய்துகிறார். புலியை முறத்தால் அடிக்கும் தமிழ் மரபு போல் அல்லாமல், வட இந்தியர் என்பதால் இவ்வளவு ஜீவகாருண்யத்துடன் டீல் செய்து, புலியையும் ஆட்டையும் காப்பாற்றி நற்பெயர் எடுக்கிறார். (என்னது வட இந்தியரா, அப்போது ஏது இந்தியா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. படம் முழுக்கவே இந்தியா என்னும் பெயரைதான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்போது இந்துஸ்தான் என்பது கூட தெரியாத அப்பாவிகளை வைத்துக்கொண்டு).  

காட்சி 2 : இன்னொரு ஹீரோயினிச காட்சி.

சின்னத்தம்பி பிரபு போல், எதுவும் அறியாமல் அமைதியாய் இருக்கும் ஒரு நபரும் ,அவரது மனைவியும் பசுக்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் கன்றுக்குட்டியை குழந்தையாக நினைத்து வாழ்கிறார்கள். கொடுங்கார ஆங்கிலேயன் ஒருவன், கன்றை வறுத்துத்திங்க ஆசைப்பட்டு அதைத் தூக்கிச் செல்கிறான். அவர்களிடமிருந்து கன்றுகளை ஆங்கிலத்தில் பேசி மீட்டு வருகிறார் ராணி லக்ஷ்மி பாய். அடுத்து அந்த கணவரும், மனைவியும் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக டூ பீஸில் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறார்கள். 

அலாவுதின் கில்ஜியை ஏனோ அந்தக் கற்பனை கதாபாத்திரமான பத்மாவதியைச் சுற்றித் திரிய வைத்தது போல், இதிலும் வரலாற்று மீறல்கள் அதிகம் இருக்கின்றன. ராஜா கங்காதரராவ் செய்த சில விஷயங்களையும், அட இது நல்லா இருக்கே என லக்ஷ்மி பாய்க்கு மாற்றி எழுதியிருக்கிறார்கள். பத்மாவதி திரைப்படத்தைப் போல் இதில் வரும் புனைவுகளால் இந்து -முஸ்லிம் சர்ச்சைகளோ, இன்னபிற சண்டைகளோ நடக்காது என்பது மட்டும்தான் இதிலிருக்கும் ஆறுதல். 

தாக்கரே போன்ற படங்களின் மூலம் இக்கால வரலாற்றையும், மணிகர்ணிகா போன்ற படங்களின் மூலம் அக்கால வரலாற்றையும் ஒருசேர துவம்சம் செய்கிறது பாலிவுட். நடுவுல இந்த தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் வேற !

``200 வருடங்களுக்குப் பின் வரும் மடையர்களுக்கு நாம் எப்படி இருந்தோம் எனத் தெரியவா போகிறது " என்கிற இம்சை அரசன் திரைப்படத்தின் வசனத்தை நினைவு கூரச் செய்கிறது மணிகர்ணிகா.