Published:Updated:

`` `பிங்க்' படத்தின் ஹாட்ஸ் ஆஃப் வசனங்கள் `நேர்கொண்ட பார்வை'யில் எப்படி இருக்கும்?!"

`` `பிங்க்' படத்தின் ஹாட்ஸ் ஆஃப் வசனங்கள் `நேர்கொண்ட பார்வை'யில் எப்படி இருக்கும்?!"

பாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற `பிங்க்' படம், தமிழில் அஜித் நடிக்க `நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. படத்தில் இடம்பெற்ற போல்டான வசனங்களைத் தமிழில் அஜித் பேசினால் எப்படியிருக்கும்?

`` `பிங்க்' படத்தின் ஹாட்ஸ் ஆஃப் வசனங்கள் `நேர்கொண்ட பார்வை'யில் எப்படி இருக்கும்?!"

பாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற `பிங்க்' படம், தமிழில் அஜித் நடிக்க `நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. படத்தில் இடம்பெற்ற போல்டான வசனங்களைத் தமிழில் அஜித் பேசினால் எப்படியிருக்கும்?

Published:Updated:
`` `பிங்க்' படத்தின் ஹாட்ஸ் ஆஃப் வசனங்கள் `நேர்கொண்ட பார்வை'யில் எப்படி இருக்கும்?!"

அஜித்தை வைத்து பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த `பிங்க்' படத்தைத் தமிழில் ரீமேக் செய்யப்போகின்றனர் என்றதுமே குஷியாகிவிட்டனர், ரசிகர்கள். அதை அதிகரிக்கும் விதமாக, படத்தின் டைட்டில் `நேர்கொண்ட பார்வை' என்பதை அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது, படக்குழு. 

ஸ்லோமோஷனில் மாஸாக நடப்பது, ரத்தினச் சுருக்கமான பன்ச் வசனங்களைப் பேசுவது என்றே பார்க்கப்பட்ட அதகளமான நடிகர், முதல் முறையாக ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவில் நடிக்கவிருக்கிறார் என்றதுமே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. காரணம், `பிங்க்' படத்தில் அமிதாப் நடித்திருந்த தீபக் சேகல் கதாபாத்திரத்துக்கு, உடல்மொழிக்குப் பெரிதாக முக்கியத்துவம் இருக்காது. ஆனால், அவர் பேசும் வசனங்கள்தாம் படத்தின் அடித்தளம். குறிப்பாக, `மோனோலோக்' (Monologue) எனப்படும் தனிக்குரல் வசனம் `பிங்க்' படத்தில் ஏராளம். அதை அஜித் எப்படிப் பேசுவார் என்பதே இப்படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு. 

அஜித் அதிகமாக மோனோலோகுகள் பேசியது, `பூவெல்லாம் உன் வாசம்', `காதல் கோட்டை', `மங்காத்தா' போன்ற ஆக்‌ஷன் அல்லது காதல் படங்களில் மட்டும்தான். இந்தப் படத்தின் ஜானருக்கு ஏற்றதுபோல ஒரு கோர்ட் ரூமில் அவர் நீளமாகப் பேசிய மோனோலோக் என்றால் அது, `சிட்டிசன்' படத்தின் க்ளைமாக்ஸ் வசனத்தைக் கூறலாம். ஆனால், அதிலும் அவர் வழக்கறிஞராக வாதிடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால், `நேர்கொண்ட பார்வை' அஜித்தின் சினிமா பயணத்தில் ஒரு புது முயற்சியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

`பிங்க்' படத்தின் மிக முக்கியமான மோனோலோக் என்றால், க்ளைமாக்ஸில் அமிதாப் பேசும் வசனங்கள்தாம். பாலியல் வன்முறைக்கு ஆளாகி, தப்பித்து வரும் பெண்களுக்காக வாதிடும்போது, `வேண்டாம்' என்ற சொல்லுக்கான முக்கியத்துவம் என்ன என்பதைப் பேசும் வசனம் அது. 

`` `நோ' என்பது ஒரு முழுமையடைந்த வாக்கியம். ``நோ மீன்ஸ் நோ" என்பார். அதாவது, `வேணாம் என்றால் வேணாம்' அதற்குமேல் அங்கே பேச ஒன்றுமேயில்லை என்பதுபோல் அந்த வசனம் எழுதப்பட்டிருக்கும்.

``நோ மீன்ஸ் நோ. ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட், செக்ஸ் வொர்க்கர், வைஃப் இவங்க யார் சொன்னாலும், `நோ'வுக்கு அர்த்தம் `நோ'தான்." 

பாலியல் வன்கொடுமை ஒரு பெரும் சமூகச் சிக்கலாகத் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில், இந்த வசனம் ஒரு திருப்புமுனையாகக்கூட அமையலாம். அதேபோல, மற்றொரு நீதிமன்ற வாதத்தில், அமிதாப் சில விதிமுறைகளைப் பட்டியலிடுவார். அந்தப் பட்டியலின் நீட்சி அடுத்து வரும் சில காட்சிகளிலும் தொடரும். அந்த விதிமுறைகள் ஒரு நக்கல் கலந்த முரணுடன் சொல்லப்பட்டிருக்கும்.

``நம்ம சொசைட்டியில நேரம்தான் ஒருத்தரோட நடத்தையைத் தீர்மானிக்குது. பொண்ணுங்க தனியா ராத்திரியில வெளியே போகும்போது, அதே ரோட்ல போகுற மக்கள் தங்களோட கார் வேகத்தைக் குறைச்சு, கண்ணாடியை இறக்கிவிட்டு, அவங்களைப் பார்ப்பாங்க. இந்த ஐடியா ஏன் காலை நேரத்துல யாருக்கும் தோணமாட்டேங்குது?" என்பதுதான் அந்த வசனம். 

``We should save our boys not the girls" எனும் மற்றொரு வசனம், `நாம் நம் ஆண் பிள்ளைகளைத்தான் பாதுகாக்க வேண்டும், பெண்களை அல்ல. ஏனென்றால், ஆண்களைப் பாதுகாத்தாலே பெண்களும் பாதுகாப்பாகிவிடுவார்கள்!' எனும் கருத்தைக் கொண்டிருக்கும். அதேபோல, ``ஒரு பெண், ஒரு ஆண் மீது ஆசை கொண்டிருக்கிறாள் என்பதை அவர்கள் இருக்கும் இடம்தான் முடிவு செய்கிறது. ஒரு ராக் கான்சர்ட்டில் அவள் வெளிப்படுத்துவது ஆசை. ஆனால், அதையே ஒரு நூலகத்திலோ, கோயிலிலோ வெளிப்படுத்தினால் அப்படி இல்லை. இடம்தான் ஒருவரின் கேரக்டரை முடிவு செய்கிறது." என்றும் ஒரு வசனம் வரும்.

இந்த வசனங்களைத் திமிரான குரலில் பேசியிருப்பார், அமிதாப். அது அஜித்தின் டையலாக் டெலிவரியுடன் நன்றாகவே பொருந்தும். `மங்காத்தா' படத்தின் இடைவேளைக் காட்சியில் சதுரங்கக் காய்களை வைத்துத் திட்டம் தீட்டும் அதே டோனில் இந்த வசனங்களைப் பேசினால், அந்தத் திமிருடன் கலந்து வரும் நகைமுரண் இதற்கும் செட்டாகும்.

``பொண்ணுங்க சிட்டி அபார்ட்மென்ட்ல தனியா வசிக்கக் கூடாது. பசங்க இருக்கலாம். ஆனா, பொண்ணுங்க `நோ'. சுதந்திரமா இருக்கிற பொண்ணுங்களால, பாவம் பசங்க குழம்பிப் போயிடுறாங்க. பொண்ணுங்க யார்கிட்டேயும் சிரிச்சுப் பேசக்கூடாது. அவங்க சந்தோசமான செய்தி எதையாவது சொல்லணும்னாகூட, முகத்தை சீரியஸா வெச்சுக்கிட்டேதான் சொல்லணும். ஏன்னா, அவங்களோட அந்தச் சிரிப்பு, பசங்களுக்கு `யெஸ்' சொல்ற மாதிரி அர்த்தம்."

மேற்குறிப்பிட்டபடி, இடத்தைப்போல ஒரு பெண்ணின் கேரக்டரை வேறு எந்தெந்த காரணிகளெல்லாம் முடிவு செய்கின்றன என்று படத்தில் ஆங்காங்கே சில வசனங்கள் வரும். தனியாக வசிக்கும் பெண்கள், மதுப்பழக்கம் உள்ள பெண்கள், இரவில் தாமதமாக வீட்டுக்கு வரும் பெண்கள்... என இங்கே பெண்களைத் தவறானவர்கள் எனக் குறை கூறுவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்ற கருத்தை `பிங்க்' பதிவு செய்திருக்கும்.

``டீசன்டான குடும்பத்துல இருந்து வந்த பெண்கள் குடிக்கமாட்டாங்க. மாறாக, ஒரு பொண்ணு குடிச்சா அவ நடத்தை கெட்டவ, தப்பானவ, அதனால அவகூட தவறா நடந்துக்கலாம். Alcohol is a sign of bad character, not for boys, but for girls. For boys it's just an health hazard. So terms and conditions differ." 

இவற்றைத் தமிழில் மொழிமாற்றம் செய்வதைத் தாண்டி, சரியான முறையில் திரையிலும் கொண்டுவர வேண்டும். படம் முழுவதும் அமிதாப்பின் கேரக்டர் கவலைகள் சூழ்ந்த ஒன்றாக இருக்கும். அந்தக் கவலையை வசனம் மூலமாக வெளிப்படுத்தாமல், முகபாவனைகள் மற்றும் காட்சி அமைப்புகள் மூலமாகவே கடத்தியிருப்பார்கள். அதற்கேற்றார்போல, அஜித்தும் நிறைய உழைக்கவேண்டி இருக்கும். பல நிகழ்வுகளை ஆடியன்ஸ் தாங்களாகவே புரிந்துகொள்ளும்படி காட்சிப்படுத்தியிருப்பார்கள். அவற்றையும் மிகக் கவனத்துடன் கையாள வேண்டும்.

``மறுபடியும் மறுபடியும் தகாத இடத்துல ஒரு பொண்ணைத் தொடும்போது, அதுக்கு அவங்க எப்படி ரியாக்ட் பண்ணணும்னு நினைக்கிறீங்க? அப்போ தற்காப்புக்காக அவங்க எடுக்கிற ஒவ்வொரு முடிவும் குற்றவாளியைக் கொலை செய்றதுக்குச் சமம் கிடையாது." எனும் இந்தப் பளீர் வசனத்துடன் படம் நிறைவு பெற்றிருக்கும். பார்ப்பவர்களை விஷுவலாக என்டர்டெயின்ட் செய்யும் காட்சிகள் `பிங்க்' படத்தில் குறைவு. அதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ஆடியன்ஸைப் படத்துடன் ஒன்றிணையச் செய்திருப்பது வசனங்களும், அவை பேசும் பெண்ணியப் பார்வைகளும்தாம். இதைக் கச்சிதமாக ஏற்று வெளிவந்தால் `நேர்கொண்ட பார்வை' படம் கண்டிப்பாக பல விருதுகளை அள்ளிச் செல்லும் வாய்ப்புகள் ஏராளம்.