Published:Updated:

`சிறையிலிருந்து ஆர்டர் செய்த பீட்சா' சுகேஷை சந்தித்த 4 நடிகைகள்; உதவிய பிங்கி; பரிமாறப்பட்ட பணம்!

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

பாலிவுட் நடிகைகள் நான்கு பேர், `மிரட்டிப் பணம் பறித்த வழக்கில்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை சந்தித்துப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

`சிறையிலிருந்து ஆர்டர் செய்த பீட்சா' சுகேஷை சந்தித்த 4 நடிகைகள்; உதவிய பிங்கி; பரிமாறப்பட்ட பணம்!

பாலிவுட் நடிகைகள் நான்கு பேர், `மிரட்டிப் பணம் பறித்த வழக்கில்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை சந்தித்துப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Published:Updated:
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரின் மனைவி லீனாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மிரட்டி பறித்த பணத்தைக்கொண்டு சுகேஷ் சிறையில் ராஜாவைப்போன்று வாழ்ந்து வந்தார் எனச் செய்திகள் வெளியாகின. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்தார் எனச் செய்திகள் வெளியாகின. மிரட்டிப் பணம் பறித்த வழக்கை அமலாக்கப்பிரிவும், டெல்லி போலீசாரும் விசாரித்து வருகின்றனர். சுகேஷ் மிரட்டி பறித்த பணத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக வாழவும், பாலிவுட் நடிகைகள் சிலருக்குப் பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கவுமே செலவு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதில் அதிகம் பயனடைந்தது பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேஹி எனவும் சொல்லப்பட்டது.

ஜாக்குலினுடன் சுகேஷ்
ஜாக்குலினுடன் சுகேஷ்

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிங்கி இரானி பாலிவுட் நடிகைகள் மற்றும் மாடல்களுடன் நல்ல நட்பில் இருப்பவர். பிங்கி இரானி மூலம்தான் சுகேஷ் பாலிவுட் நடிகைகள், டிவி நடிகைகளை சிறைக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார் என்கின்றனர். அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் நடிகைகள் நிகிதா தம்போலி, சஹத் கன்னா, சோபியா சிங், அருஷா பாட்டீல் ஆகியோர் சிறையில் சென்று சுகேஷ் சந்திரசேகரைச் சந்தித்துப் பணம் மற்றும் பரிசுகளை வாங்கி வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை பிங்கி இரானிதான் ஆசைவார்த்தைகளைக்கூறி சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான்கு நடிகைகளிடமும் சுகேஷ் குறித்து வேறு வேறு பெயர்கள் மற்றும் பல்வேறு பொய்யான தகவல்களைச் சொல்லி பிங்கி சிறைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

நிகிதா தம்போலி

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிகிதா தம்போலியிடம் சுகேஷ் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் என்றும், தனது நண்பர் என்றும் கூறி 2018ம் ஆண்டு இருவரையும் பிங்கி இரானி முதல் முறையாக சந்திக்க வைத்தார். இருவரும் இரண்டு முறை சந்தித்துள்ளனர். ஒரு முறை பிங்கியுடன் சென்று நிகிதா சந்தித்தபோது ரூ.10 லட்சத்தை பிங்கியிடம் சுகேஷ் கொடுத்திருக்கிறார். அதில் ரூ.1.50 லட்சத்தை மட்டும் நிகிதாவிடம் கொடுத்துவிட்டு பாக்கியை பிங்கி வைத்துக்கொண்டார். முதல் சந்திப்பு முடித்து 3 வாரங்கள் கழித்து நிகிதா தனியாக சென்று சுகேஷை சிறையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு ரூ.2 லட்சமும், பேக் ஒன்றையும் சுகேஷ் பரிசாகக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக நிகிதா அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் `2018ம் ஆண்டு பிங்கி தன்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாகவும், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும், என்னை வைத்துப் படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். டெல்லியில் சென்று பார்க்கவேண்டும் என்று தெரிவித்தார். டெல்லியில் பிஎம்டபிள்யூ காரில் சிறை வரை அழைத்துச் சென்றனர்.

நிகிதா தம்போலி
நிகிதா தம்போலி

சிறைக்குள் வேறு ஒரு காரில் அழைத்து சென்றனர். அங்கு எந்த வித சோதனையும் நடத்தவில்லை. சிறையில் சுகேஷ் தன்னை சேகர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தான் பெரிய தயாரிப்பாளர் என்று தெரிவித்தார்" என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் நிகிதா தெரிவித்தார். இரண்டாவது முறை நான் தனியாக சென்று சந்தித்தபோது சிறையில் அவன் இருந்த அறையில் ஏராளமான பேக்கள் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து கொடுத்து ரூ.2 லட்சமும் கொடுத்தார் என்றும் நிதிகா குறிப்பிட்டுள்ளார்.

பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சஹத் கன்னாவிடம் பிங்கி தென்னிந்திய டிவி உரிமையாளர் ஒருவர் உங்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இது குறித்து கன்னா அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், பிங்கி என்னை மும்பையில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்றார். டெல்லியில் இரண்டு கார் மாறி சிறைக்குச் சென்றோம். டெல்லி திகார் சிறையின் முதல் மாடிக்கு சென்ற போது அங்கு ஏசி, பிளே ஸ்டேசன், பெரிய டிவி, லேப்டாப், பிரிட்ஜ், ஆடம்பர பேக் போன்றவை இருந்தது. சுகேஷ் என்னிடம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் என்றும், தனது பெயர் சேகர் என்றும், தேர்தல் வாக்களிப்பு மோசடியில் சிறையில் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வெளியில் வந்துவிடுவேன் என்று தெரிவித்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறையில் இருந்து வந்த பிறகு தன்னிடம் பிங்கி ரூ.2 லட்சமும், ஆடம்பர வாட்ச் ஒன்றும் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

சோபியா சிங்

டிவி நிகழ்ச்சிகளில் நடித்திருக்கும் நடிகை சோபியா சிங்கிடம் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறி சுகேஷிடம் பிங்கி அழைத்து சென்றுள்ளார். சுகேஷை சோபியா இரண்டு முறை சிறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். முதல் முறை ரூ.2 லட்சமும், இரண்டாவது முறை ரூ.1.5 லட்சமும் இதற்காக சோபியாவிற்கு கிடைத்துள்ளது.

சோபியா சிங்
சோபியா சிங்

சுகேஷை சோபியாவிடம் சேகர் ரெட்டி என்றும், பெரிய அதிகாரி என்றும் தென்னிந்தியாவில் படம் தயாரிக்க இருப்பதாகவும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிங்கி. சிறையில் இருந்து கொண்டே பிஸ்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். ஒரு முறை பிங்கியுடனும், ஒரு முறை தனியாகவும் சென்று சந்தித்துள்ளார் என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்திருக்கிறது. மற்றொரு நடிகையான அருஷா பாட்டீல் சுகேஷுடன் வாட்ஸ்அப் காலில் மட்டுமே பேசியிருக்கிறார். அதற்கு சுகேஷ் ரூ.5.20 லட்சம் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு லட்சத்தை பிங்கிக்கு அருஷாபாட்டீல் டிரான்ஸ்பர் செய்துவிட்டார்.