Published:Updated:

அனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்!

Vikatan Correspondent
அனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்!
அனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்!
அனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்!

பாலிவுட்டின் மாஸ் டைரக்டர் ப்ளஸ் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோஹர் இதுவரை துண்டு, துக்கடா ரோல்களில் கூட தலைகாட்டியதில்லை.

கேமியோ, கெஸ்ட் அப்பியரன்ஸஸில் கூட  நடிக்க முன்வராத கரண் ஜோஹர் இப்போது வில்லனாக நடிக்கிறார் என்பதுதான் பாலிவுட் சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அனுராக் காஷ்யப் இயக்கும் 'பாம்பே வெல்வெட்' படத்தில் ரன்பீர்கபூரும், அனுஷ்கா சர்மாவும் நடிக்கின்றனர். இதில் கரண் வில்லனாக நடிக்கிறார். வழக்கம்போல் யாராவது இப்படி ஒரு வதந்தியைக் கொளுத்திப் போட்டிருப்பார்களோ என்று சந்தேகப்படத் தேவையில்லை.

கரண் ஜோஹரே தான் வில்லனாக நடிப்பதை அறிவித்து இருக்கிறார்.

அனுராக் கதை சொன்னதும் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. நான் ரசிப்பதைப் பார்த்த அனுராக் நீங்கள் என் படத்தில் நடிக்க முடியுமா? என்று கேட்டார். நான் வழக்கமாக நடிப்பதில்லை. ஆனால், அனுராக் கேட்டதும் மறுப்பு சொல்ல எனக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. இவ்வளாவு ஸ்ட்ராங்கான வில்லன் கேரக்டரில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் கரண்.

41 வது வயதில்  எனக்கு ஒரு மாற்றம் கிடைத்திருப்பது நல்லது. நான் அனுராக்கின் பார்வையில் என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை மட்டும் செய்வேன். என் இயக்குநர் பணியை ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளிப்படுத்த மாட்டேன். ஒரு நடிகனாக டைரக்டர் சொல்வதை  செய்வதே என் வேலை என்கிறார் கரண்.