Published:Updated:

காதல் முதல் காதல் வரை... சல்மானின் காதல் கதைகள்!

காதல் முதல் காதல் வரை...  சல்மானின் காதல் கதைகள்!
காதல் முதல் காதல் வரை... சல்மானின் காதல் கதைகள்!

‘கான்’கள் நிறைந்த பாலிவுட்டின் டாப் கான்களில் ஒருவர்  சல்மான்கான்.  காதல் சர்ச்சைகளையும், காதல் நாயகிகளையும் இவரிடமிருந்து பிரித்தெடுக்கமுடியாத காந்தவியல் சக்தி இருப்பதாகவே பாலிவுட் திரையுலகம் நம்பிவருகிறது. சல்மான் கானுக்கு 50 வயதாகிறது. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் தவறாமல் இவரிடம் வைக்கப்படும் கேள்வி, எப்போது திருமணம்? மெளனத்தையே பதிலாக கொடுத்துவந்த சல்மானுக்கு திருமண ஆசை வந்துவிட்டது.

யார் அந்த அம்மணி என்ற எதிர்பார்ப்பில் ஆராய்ந்தால், இன்றைய நிலவரப்படி சல்மான்கானுடன் காதலில் இருக்கும் இத்தாலிய அழகி லூலியாவே மணமகள்! சரி, சல்மான்கானும் இவரின் காதலும் என்று ஒரு டைம் டிராவல் வாட்சில் பின்னோக்கி சென்றால், வரிசையாக இவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளைக் கடக்காமல் செல்ல முடியாது என்று தோன்றுகிறது.

இதுவரை இவருடன் நடித்த எட்டு நடிகைகளுடன் இணைத்து சல்மான் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாராய், சங்கீதா பிஸ்லானி, சினேகா உள்ளல், பாகிஸ்தானிய நடிகை சோமி அலி, காத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல நடிகைகளும் இவருடன் சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் டூயட் பாடியிருக்கிறார்கள்.

சல்மான் கானும் காதல் நாயகிகளும்:

சல்மான்கானுடன் முதலில் காதலில் விழுந்தவர், சங்கீதா பிஸ்லானி தான். 1980களில் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சங்கீதா. அந்த நேரத்தில் இருவருக்குமான நட்பு அதிகமாகி காதலாக மாறியது. காதல் முறிந்தாலும், நீண்ட வருடங்களுக்கு சல்மானின் குடும்பத்துடன் நெருக்கமாகவே இருந்திருக்கிறார் சங்கீதா.

டேட்டிங், க்ளப்பிங் என்று கிசுகிசுக்கப்பட்ட பாகிஸ்தான் நாயகி தான் சோமி அலி. 1993லிருந்த நட்பு, காலப்போக்கில் காதலாக மாறுவது தானே விதி, விதிவிலக்கில்லாத சல்மான் கானும் சோமி அலியும் மும்பையில் சுற்றாத ஏரியா கிடையாது, பின்னர் 1999ல் சல்மான் கானின் கோபமும், ஒரு சில நடவடிக்கைகளும் பிடிக்காமல் பிரிந்து பாகிஸ்தானுக்கே பறந்தார்.

1999ல் சல்மான்கானுடன் அதிகமாக பேசப்பட்ட நாயகி, அன்றைய உலகழகி ஐஸ்வர்யா ராய். 21 வயது அழகிக்கும், உச்சகட்ட பேச்சிலர் வயதிலிருக்கும் சல்மானுக்குமான காதலே அன்றைய செய்திதாள்களில் படுசுவாரஸ்யம், காரணம் இருவரும் இணைந்து நடித்து ஹிட்டான “ஹம் தில் தே சுக்கே சனம்”. பின்னர் 2002ல் ரெண்டுவருக்கும் இடையே முட்டிக்கொள்ள, சல்மான் கான் டார்ச்சல் தாங்க முடியாமல் காவல் நிலையத்திற்கே  ஐஸ்வர்யா ராய் சென்றதெல்லாம் படிக்க போரடிக்கிற பழையகதை.

பிறகு சல்மான்கானின் டார்கெட், நடிகை சிநேகா உல்லால். ஐஸ்வர்யா ராய் போலவே இவரும் அதிகமாக செய்திகளும், வதந்திகளுக்கு ஆளானார். சல்மானுடன் காதலிலும் விழுது, சிறகொடிந்து பறந்திருக்கிறார். ’சினிமாவில் இருக்கிறேனோ இல்லையோ என் வாழ்க்கையில் எப்போதும் சல்மான் இருப்பார்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

2010ல் சல்மானுடன் பேசப்பட்ட நடிகை கத்ரீனா கைஃப். ஆனால் இருவருமே தங்களுடைய உறவுபற்றி எந்த பேட்டியிலும் கூறியது கூட கிடையாது, இருவரும் காதலித்து, புரிதலுடன் பிரிந்த அழகிய ஜோடி.  சல்மானின் குடும்பத்துடன் நெருக்கமானவர் கத்ரீனா, அதனால் காதலின்றி நட்பாகவே இன்றுவரைக்கும் தொடர்வதாக சொல்லப்படுகிறது.

காத்ரீனா கைஃபுடனாக காதலும் பிரிந்தவுடன், ஜெர்மன் மாடல் Claudia Ciesla, ஜார்ன் கான், Mahek Chahel and Hazel Keech என்று காதலும் நீண்டிருக்கிறது. ஆனால் எந்த செய்தியும் லைம் லைட்டுக்குள் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சல்மான்கான், அடிக்கடி இத்தாலி பறந்துவிடுகிறார் என்ற செய்திகள் அதிகரித்தவண்ணம் ஆரம்பத்தில் கிளம்பின. இத்தாலிய மாடலான லூலியாவை காணவே கண்டம் விட்டு கண்டம் தாண்டியிருக்கிறார் சல்மான். நாடு நாடாக தன் காதலை உறுதிப்படுத்த சுற்றுப்பயணமும் செய்திருக்கிறது இந்த ஜோடி. இறுதியில் சல்மான்கானின் காதல் விவகாரம், இவரின் பிறந்தநாள் விருந்தில் லைம்லைட்டுக்குள் சிக்க, வைரல் லிஸ்டிலும் இவரின் பேச்சே அடிபட்டது.

இறுதியில், சல்மான்கானுக்கும் லூலியாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு மாதங்களில் இந்த ஜோடிக்குத் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான்கான் சமீபத்தில் தான், குடித்துவிட்டு நடைபாதையில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகி விடுதலை செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.  எந்த காதலும் திருமணம் வரை செல்லாத சல்மான் கான் சமீபத்தில் எந்த சர்ச்சையிலும் சிக்காமலிருந்தார். இந்த திருமணம் செய்தி தற்பொழுது சல்மான் கான் பற்றியான பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.

சல்மானின் கோபமே இவரின் காதல்களுக்கு பெரும் இடையூறாக இருந்திருக்கிறது. கோபமும், மூர்க்கத்தனமும் இவரிடம் இருப்பதாகவே இவரின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும்  இனியாவது லூலியாவுடன் இல்லற வாழ்க்கையை சீராக தொடர்வாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நிச்சயம் நடபெறும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகள் சல்மான் ஜி!, ப்ளீஸ் இந்தமுறையாவது கல்யாணம் பண்ணீடுங்க!...

பி.எஸ்.முத்து