Published:Updated:

'இப்படியெல்லாம் ஐஸ்வர்யா ராய் பிரபலமாக வேண்டியதில்லை'- சோனம் கபூர் காரசாரம்

'இப்படியெல்லாம் ஐஸ்வர்யா ராய் பிரபலமாக வேண்டியதில்லை'- சோனம் கபூர் காரசாரம்
'இப்படியெல்லாம் ஐஸ்வர்யா ராய் பிரபலமாக வேண்டியதில்லை'- சோனம் கபூர் காரசாரம்


'கேன்ஸ்' திரைப்பட விழாவில், நடிகை ஐஸ்வர்யாராய் போட்டிருந்த பர்ப்பிள் கலர் லிப்ஸ்டிக், பலரின் விமர்சனத்திற்குள்ளானது. எதிர்மறையான கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எதிர்க்கருத்துச் சொல்வோர்  பட்டியலில் சோனம் கபூரும் இணைந்திருக்கிறார்.

சர்ப்ஜித் திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் மக்களிடையே தனக்கான இடத்தைப் பிடிக்கவே ஐஸ்வர்யாராய் இவ்வாறு நடந்திருக்கிறார், அவர் என்ன சாதனை செய்யவேண்டுமோ, அந்தச் சாதனையை ஏற்கெனவே செய்துவிட்டார். இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை செய்துதான் தன்னை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் அவருக்குக் கிடையாது''  என காரசாரமாகப் பேசியிருக்கிறார் சோனம் கபூர்.

இதோ அவர் ஐஸ்வர்யா ராய் பற்றிப் பேசியது...  

''கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த 'பர்ப்பிள்' கலர் லிப்ஸ்டிக் அவருடைய காஸ்மெடிக் பிராண்டிற்காக அணிந்திருப்பதாகச் சொன்னார். ஆனால். அது 'சர்ப்ஜித்' படத்திற்கான புரமோஷன் தான். அது வெளிப்படையாகவே தெரிந்தது. இந்தத் திரைப்பட விழாவில் அவர் கலந்துகொள்வது இது 15 வது வருடம். அவருக்குத் தெரியாதா.. ஒரு பெரிய திரைப்பட விழாவிற்கு எப்படி ஆடை அணிய வேண்டும் என்று..? இந்த விழாவில், அவர் அணிந்திருந்த பர்ப்பிள் கலர் லிப்ஸ்டிக் அனைவருக்குமே வித்தியாசமாகத்தான் தெரிந்தது. 

பொதுவாக, ஃபேஷன் ஷோ மற்றும் மேக்கப் ஷோ என்பதே மக்களிடையே பேச வைக்கப்படுகிற ஒரு நிகழ்ச்சிதான். அதில் தன்  படத்திற்கான ப்ரமோஷனை சேர்ப்பது எவ்விதத்தில் சரியாகும்? ஐஸ்வர்யா ராய் இதைப் பற்றி ஊடகங்களின் வழியே பேச வைத்திருக்கிறார். அவர் இதுவரை சாதிக்க நினைத்ததை சாதித்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. இந்த ஷோவின் போது ஐஸ்வர்யா ‘லோரியல்’ விளம்பரத்துக்காகவே இந்த கலர் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அன்று ‘லோரியலு’க்காகத்தான் லிப்ஸ்டிக் அணிந்து வந்தார் என்று எனக்குத் தோன்றவில்லை. மக்கள் அவருடைய படத்தைப் பற்றி பேச வேண்டும் என நினைத்ததாலேயே இப்படி கவனிக்கும்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பது 'பளிச்'சென்று தெரிந்தது. இதன் மூலம் அவரின் 15 வருட கேன்ஸ் விழாவானது வித்தியாசமான முறையில் நடந்திருக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

எப்படியிருந்தாலும், பல இடங்களில் அவர் ட்ரெண்டாகவே இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு அந்த கலர் பிடித்திருந்தது, அதே நேரம் அதை ஆடம்பரமாகவும் விரும்பி அணிந்திருக்கிறார். 'நீர்ஜா' படத்தில் நான் இதேபோல் தான் பர்ப்பிள் கலர் லிப்ஸ்டிக் அணிந்து நடித்தேன்.. அத்தோடு, யாரும் முன்வந்து அணியாத பிளாக் கலர் லிப்ஸ்டிக்கையும் அணிந்து நடித்திருந்தேன். அப்போதெல்லாம் மக்கள் இதைப்பற்றி பெரிய அளவில் பேசவில்லையே ஏன்?”

என்றெல்லாம் கேட்டிருக்கிறார் சோனம்.
 


எடுத்தவுடன் சோனம் இப்படி ஐஸ்வர்யா ராய் பற்றி காரசாரமாகப் பேசிவிடவில்லை. அவரது இந்தப் பேச்சிற்குப் பின்னால் நிறைய விஷயம் இருக்கிறது.

சோனம் அணிந்து வரும் ஆடைகளையும் பலரும்  கிண்டலடித்து அவரை 'டிஸ்டர்ப்' பண்ணியிருக்கிறார்கள். இந்த வருடம் கேன்ஸ் விழாவில் சோனம் கபூர் அணிந்திருந்த ரால்ஃப் & ரூசோ கவுன் பற்றிப் பலரும் கிண்டலடிக்க கடுப்பானார் சோனம்.

அதைப் பற்றி கேட்டதற்கு, 'நான் அணிந்திருந்த கவுன் பற்றி ஒன்றிரண்டு பேர் பேசுவது குறித்து எனக்குக் கவலை இல்லை. நான் அணிந்த ஆடைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஆடை இதுதான். இதை தனிப்பட்ட முறையில் நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் அந்த உடையை அணிந்தபோது, மிகவும் அழகாக இருப்பதாக உணர்ந்தேன்.  இந்திய மக்களுக்காக உடைகளில் வித்தியாசத்தை காட்டவேண்டும் என்று  விரும்பினேன். அதனால்தான், யாரும் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு டிசைன் செய்யப்பட்ட  ஜிமிக்கிகள் மற்றும் சேலை கவுன் அணிந்து வந்தேன். உலகின் பல பகுதிகளில், பல மக்களை சந்தித்திருக்கிறேன். அதில் ஒரு பகுதியாகத்தான் இந்திய சினிமாவைப் பார்க்கிறேன். இங்கே பட்டுப்பூச்சி கூண்டிற்குள் இருப்பது போலவே பலரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். வாழ்க்கை என்பது வானத்தை தொடும் அளவுக்கு உள்ளது என்பதை உணரவேண்டும். இதையும் தாண்டி உலகம் இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.'' என்றார் சோனம்.

கங்கனா ரணாவத்தைப் போல இந்தப் பொண்ணும் ஏதோ உலகத்துக்கு சொல்ல நினைக்குது போல...

நீ ஃபீல் பண்ணாத கண்ணு!

-நதி

பின் செல்ல