Published:Updated:

கங்கனா விமர்சித்த 67வது பிலிம்பேர் விருது - திரண்டுவந்த பாலிவுட்; விருது விழாவின் ஹைலைட்ஸ்!

ரன்வீர் சிங், கிருத்தி சனோன்

67வது பிலிம்பேர் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளை நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை கிருத்தி சனோன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கங்கனா விமர்சித்த 67வது பிலிம்பேர் விருது - திரண்டுவந்த பாலிவுட்; விருது விழாவின் ஹைலைட்ஸ்!

67வது பிலிம்பேர் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளை நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை கிருத்தி சனோன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Published:Updated:
ரன்வீர் சிங், கிருத்தி சனோன்
பாலிவுட்டில் பிலிம்பேர் விருது மிகவும் பிரபலமான ஒன்று. 67வது பிலிம்பேர் விருது நேற்று முன்தினம் இரவு பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டில் நடந்தது. விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
சர்தாம் உதம்
சர்தாம் உதம்

விழாவில் '83' படத்தில் கபில்தேவாக நடித்த ரன்வீர் சிங்கிற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனுடன் வந்து விருதைப் பெற்றுக்கொண்டார். இது தவிர கிருத்தி சனோன் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். 'மிமி' என்ற படத்தில் வெளிநாட்டுத் தம்பதிக்கு வாடகைத் தாயாக நடித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

திரைப்பட விமர்சகர்கள் (Critics) சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர் விருது 'சர்தார் உதம்' படத்துக்காக விக்கி கௌஷலுக்கும், 'ஷெர்னி' படத்துக்காக வித்யா பாலனுக்கும் வழங்கப்பட்டது. 'ஷெர்ஷா' என்ற படத்தை இயக்கிய தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்குச் சிறந்த இயக்குநர் விருது, அதே 'ஷெர்ஷா' படத்துக்குச் சிறந்த படத்துக்கான விருது ஆகியனவும் வழங்கப்பட்டன. 'சர்தார் உதம்' படத்துக்குச் சிறந்த படம் என்ற விமர்சகர்களின் விருதும் வழங்கப்பட்டது. நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு 'மிமி' படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் விருதும் கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகர் விருது எஹான் பட்டுக்கு '99 சாங்கஸ்' படத்துக்காகவும், சிறந்த அறிமுக நடிகை விருது ஷர்வாரி வாக்குக்கு 'பன்டி அவுர் பப்லி 2' படத்துக்காகவும் கிடைத்தது.

'ஷெர்ஷா' படத்திலிருந்து...
'ஷெர்ஷா' படத்திலிருந்து...

சிறந்த அறிமுக இயக்குநர் விருது 'ராம்பிரசாத் கி தெஹ்ராவி' படத்துக்காக சீமா பஹ்வாவிற்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது சுபாஷ் கய்க்கு வழங்கப்பட்டது. விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சிறந்த நடிகைக்கான பரிந்துரைப் பட்டியலில் நடிகை கங்கனா ரணாவத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. இதனால் கங்கனா ரணாவத் பிலிம்பேர் நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.