Published:Updated:

ராதிகா ஆப்தே வீடியோ குறித்து, இயக்குநர் விளக்கம் #Parched

ராதிகா ஆப்தே வீடியோ குறித்து, இயக்குநர் விளக்கம் #Parched
ராதிகா ஆப்தே வீடியோ குறித்து, இயக்குநர் விளக்கம் #Parched

கபாலியில் குமுதவள்ளியாக நடிப்பில் சிக்ஸர் தட்டியவர் ராதிகா ஆப்தே. துணிச்சலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பது இவரின் ஸ்பெஷாலிட்டி! இதனால் சர்ச்சைகள் வந்தாலும், அதை எதிர்கொள்வது இவருக்கு அசால்ட் விஷயம். 

சமீபகாலங்களில் ராதிகா ஆப்தே என்றாலே சர்ச்சை வீடியோக்கள் என்றாகிவிட்டது. “கதைக்கு தேவைப்பட்டதால் அக்காட்சிகளில் நடித்தேன். இந்தியாவில் தேவையற்றக் காட்சிகளை நீக்கிவிட்டு தான் வெளியிடுவார்கள்” என்று இவர் நடித்த ஹாலிவுட் படத்தின் வீடியோ ரிலீஸானபோது ராதிகா சொன்னது. அடுத்தாக அனுராக் இயக்கிய குறும்படத்தில், ராதிகாவின்  ஆபாச வீடியோக  இணையத்தில் பரவியது. இதனால் கோவமடைந்த அனுராக், மும்பை போலீஸில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, “ராதிகாவின் வீடியோக்கள்” என வடமாநிலங்களில் சி.டி. விற்பனை செய்கின்றனர்.  அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் ராதிகாவை பின்தொடர்ந்து வந்திருக்கிறது பார்ச்டு பட சர்ச்சை. 

லீனா யாதவ் இயக்கத்தில் அஜய்தேவ்கன் தயாரித்திருக்கும் படம் பார்ச்டு. செப்டம்பர் 23ல் ரிலீஸாகும் இப்படம், வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்தை மையமாக கொண்ட கதைக்களம். பெண்களுக்கெதிரான  வன்முறைகள், குழந்தை திருமணம், கற்பழிப்பு, விதவைகளுக்கான மறுவாழ்வு என்று சிக்கலான பல பிரச்னைகளை இப்படம் பேசுகிறது.  பார்ச்டு...  வன்முறையுடனே, மனைவியை கற்பழிக்கும் கணவன், குஜராத்தில் பாலியல் தொழிலால் உடலில் வடுக்களோடு இருக்கும் பாலியல் தொழிலாளி, அதே கிராமத்தில் இருக்கும் இன்னும் இரண்டு பெண்கள்.  இந்த நால்வரையும் சுற்றியான பிரச்னைகளும், அவர்களுக்கான விடுதலை என்னவென்பதை இப்படம் பேசுகிறது. 

உலக திரையரங்குகளில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் விருதுகளையும் பெற்றிருக்கிறது.  இதுவரை 24 சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு, 18 விருதுகளையும் பெற்றிருக்கிறது இந்த பார்ச்டு. அதுமட்டுமின்றி இதுவரை 7 நாடுகளில் ரிலீஸாகிவிட்டது. குறிப்பாக  பிரான்ஸில் ரிலீஸாகி 22வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ராதிகா ஆப்தே - அடில் ஹூசைன்  (Adil Hussain) இடையேயான ஆபாச காட்சிகள் இணையத்தில் பரவின. பலரும் இவ்வீடியோவை இணையத்திலும், வாட்ஸ் அப்களிலும் வெளியிட்டுவருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. 

இயக்குநர் லீனா, “ இந்த வீடியோவை விரும்பிப் பார்ப்பதிலும், பிரபலப்படுத்துவதிலும் மட்டுமே மக்கள் ஆர்வமாக இருக்கிறர்கள். இதைப் பற்றி பெரிதுபடுத்திப் பேசுவதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். தவறான எந்த காட்சிகளும் இல்லாமல் படத்திற்குத் தேவையானவை மட்டுமே படமாக்கியிருக்கிறோம். ஆபாச வீடியோவாக இணையத்தில் பரவுவதை, படத்தோடு பார்த்தால்தான் அதன் உட்பொருள் தெரியும். அதைவிடுத்து, தனியாக ஆபாசமாகப் பார்ப்பது போல எதையும் நாங்கள் படத்தில் காட்சிப்படுத்தவில்லை” என்பதை இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார் லீனா.   

கூடுதலாக, இப்படம் விதவைப் பெண்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் திருமணம் என்ற பெயரில் நிகழும் கற்பழிப்பு  என்று பெண்களுக்கெதிரான கொடுமைகளை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இந்தப் படத்திலிருக்கும் காட்சிகளை தவறாக சித்தரிப்பது, தனிப்பட்டவகையில் பெண்களை அவமானப்படுத்துவது போன்றது தான். தவிர, இச்சமுதாயத்தை, இந்தப் படம் திருத்திவிடப்போவதில்லை. இப்படத்தினால் ஏற்படும் விவாதங்களை மட்டுமே நான் ஆரோக்கியமாக கருதுகிறேன். மாற்றத்திற்கான முதல் கட்டமே விவாதங்கள் தானே” என்று படத்திற்கு எதிரான சர்ச்சைகளுக்குப்  பொறுப்பாக பதிலளிக்கிறார் இயக்குநர் லீனா. 

இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் தான் கற்பழிப்பு, பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாக அரங்கேறிவரும் சூழல் நிலவுகிறது. அங்கேயே தான் குயின், உட்தா பஞ்சாப் மற்றும் இந்த வாரம் ரிலீஸாகப்போகும் பிங்க் என்று பெண்களின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் படங்களும் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறான படங்களில் நடிக்கும் நடிகைகளையும் சர்ச்சைகள் விட்டுவைப்பதில்லை.  

மாற்றத்தை எதிர்நோக்கி வெளியாகும் படங்களை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது நம்முடைய தலையாய கடமை. இது பெண்களின் முன்னேற்றம் மட்டுமல்லாமல் ஆண்களின் கம்பீரத்தையும் பறைசாற்றும் அல்லவா! இவ்வாறான படங்கள் சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சிறியளவில் உதவினாலும் நல்லது தானே” என்கிறார்கள் திரையுலகினர்.  

குற்றவாளி யார் என்பதை சிந்திக்காமல், இனி குற்றங்களை குறைப்பதற்கான வழியை தேடுவதே நல்லது! 

டிரெய்லரைக் காண: 

பி.எஸ்.முத்து