Published:Updated:

அட... ‘சக் தே இந்தியா’ பெண்களா இது?

தார்மிக் லீ
அட... ‘சக் தே இந்தியா’ பெண்களா இது?
அட... ‘சக் தே இந்தியா’ பெண்களா இது?

'சக் தே இந்தியா' படத்தில் கப் ஜெயித்துக் கொடுக்கும் அந்த தங்க மங்கைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?

ஆர்யா மேனன் - குல் இக்பால் :

படத்தில் வரும் குல் இக்பாலின் உன்மையான பெயர் ஆர்யா மேனன். படத்தில் உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹாக்கி விளையாட வரும் இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர். மொத்தமே இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கு மொழியில் 'நானே என்னுள் இல்லை' என்ற படத்தில் நடித்துள்ளார். 'ஐ சீ யூ' என்ற குறும்படத்திற்கு இவர்தான் இணை தயாரிப்பாளர். படத்தில் இரட்டை ஜடை போட்டு அப்பாவி பொண்ணு போல் இருந்தாலும் இவர் மாடர்ன் கேர்ள்தான்.

அனைதா நாயர் - அலியா போஸ் :

படத்தில் வரும் அலியா போஸின் உன்மையான பெயர் அனைதா நாயர். நாயர் என்ற பெயரை வைத்தே பிடித்துவிடலாம் இவர் பூர்விகம் கேரளம் என்று. கேரளாவில் பிறந்திருந்தாலும் இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே பெங்களுருவில்தான் 'சக் தே இந்தியா' படத்துடன் சேர்த்து மலையாளம், இந்தி என 10 படங்களில் நடித்துளார். சினிமாக்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் டெய்ரி மில்க், டவ், நெஸ்கஃபே எனப் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். 

சந்தியா ஃபர்டடோ - நேத்ரா ரெட்டி :

படத்தில் நேத்ரா ரெட்டியாக வரும் இவர் நடித்த ஒரே படம் 'சக் தே இந்தியா' தான். படத்தில் செமையாக காமெடி செய்வார். போன வருடம்தான் மாட்டியோ பூஸா என்ற லண்டன் மாப்பிள்ளையோடு திருமணம் ஆனது. படத்தில் ஸ்கூல் பொண்ணு போல இருந்தாலும் இப்போது கர்லிங் முடி வைத்து பார்க்க அழகாகவே உள்ளார். இப்போது இவர் பப்ளிக் ரிலேஷனில் இருக்கிறார்.

தான்யா அப்ரோல் - பல்பிர் கவுர் :

படத்தில் எதிரிகளை இடித்து துவம்சம் செய்பவர் பல்பிர் கவுர். இவர் போர் அடித்தால் வெவ்வேறு படத்தில் நடித்து வருவார் போல. ஆங்கிரிங்கில் ஹோஸ்ட் செய்வது டி.வி. தொடர்களில் நடிப்பது, 'பஞ்சாபி' படத்தில் நடிப்பது எனப் பல்வேறு கலவையாய் கலக்கி வருகிறார். இப்போது 'சி.ஐ.டி' என்ற இந்தி நாடகத்தில் நடித்து வருகிறார். 

சுபி மேதா - குஞ்சன் லகானி :

படத்தில் வரும் காந்தக் கண்ணழகி குஞ்சன் லகானி உமையான பெயர் சுபி மேதா. மொத்தமாகவே 'சக் தே இந்தியா' படத்துடன் சேர்த்துக் குறும்படம் உள்பட மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதன்பின் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. சினிமா பக்கம் இவரைக் காண முடியவில்லை. சென்ற வருடம்தான் இவருக்குத் திருமணம் முடிந்தது.     

வித்யா மால்வடே - வித்யா ஷர்மா :

மகாராஷ்டிராவில் பிறந்தவர் வித்யா மால்வடே. சட்டம் படித்த இவர் ஒரு ஏர் ஹோஸ்டஸ். மொத்தமாக 13 படங்களில் நடித்துள்ளார். அரவிந்த் சிங் என்ற பைலட்டுடன் திருமணம் முடிந்தது. ஆனால் 2000-த்தில் நடந்த விமான விபத்தில் அவர் இறந்துவிட்டார். அதன் பின் 'லகான்' படத்தில் நடித்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட சஞ்சய்யுடன் திருமணம் முடிந்தது. சினிமா, சீரியல் என பாலிவுட்டைக் கலக்கி வருகிறார். 

சித்ராஷி ராவட் - கோமல் சௌதலா :

இவர் உண்மையிலேயே ஒரு ஹாக்கி வீராங்கனை. இவரது சினிமா பயணம் 'சக் தே இந்தியா' படம் மூலமாகத்தான் ஆரம்பித்தது. படத்திலும் இவரின் விளையாட்டிற்குப் பஞ்சம் இல்லை. இவருக்கும் ப்ரீத்தி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் க்ளைமாக்ஸில் இருவரும் கைகோத்து கோல் போடுவது கெத்துதான். 

ஷில்பா சுக்லா - பிந்தியா நாயக் :

படத்தில் வரும் பிந்தியா நாயக்கின் உண்மையான பெயர் ஷில்பா சுக்லா. இவருக்கும் ஷாரூக் கானுக்கும் மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதுவரை பத்து படங்களில் நடித்திருக்கிறார். இவர் பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். ஃபிலிம் ஃபேர் உள்பட மூன்று விருதுகளும் பெற்றிருக்கிறார். இவர் நடித்த 'பி.ஏ. பாஸ்' என்ற திரைப்படம் மூலமும் இவர் ஃபேமஸ்தான்.

சகாரிகா காட்கி - ப்ரீத்தி சபர்வால் :

படத்தில் ப்ரீத்தி சபர்வாலாக வரும் இவரது சொந்த ஊர் மகாராஷ்டிரா. 'சக் தே இந்தியா' தான் இவர் நடித்த முதல் படம். இவர் ரீபோக்கின் ப்ராண்ட் அம்பாஸிடரும்கூட. பஞ்சாபி, இந்தி என 8 படங்களில் நடித்துள்ளார். 'தில் டரியான்' என்ற பஞ்சாபிப் படத்திற்காக இவர் பஞ்சாபி மொழி கற்றுக்கொண்டார். இவர் ஒரு நேஷனல் லெவல் அத்லெட்டும்கூட.  

- தார்மிக் லீ