Published:Updated:

‘‘வீடு வாங்கவே பணம் இல்லை; என்னைப் போய் இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே!’’ - சல்மான் கான் சொல்வது நிஜமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘வீடு வாங்கவே பணம் இல்லை; என்னைப் போய் இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே!’’ - சல்மான் கான் சொல்வது நிஜமா?
‘‘வீடு வாங்கவே பணம் இல்லை; என்னைப் போய் இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே!’’ - சல்மான் கான் சொல்வது நிஜமா?

‘‘வீடு வாங்கவே பணம் இல்லை; என்னைப் போய் இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே!’’ - சல்மான் கான் சொல்வது நிஜமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அண்மையில் உலகப் புகழ்பெற்ற போர்ஃப்ஸ் இணையதளம், உலகில் அதிகமாக சம்பாதிக்கும் 100 பேர் கொண்ட வி.ஐ.பி.க்களின் லிஸ்ட்டை வெளியிட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் 65-வது இடத்திலும், 71-வது இடத்தில் சல்மான்  கான் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஷாரூக்கான், வருடத்துக்கு தோராயமாக 245 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும், சல்மான்கான் சுமார் 240 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் ஆதாரத்தோடு சொல்லியிருந்தது ஃபோர்ப்ஸ் இணையதளம். இணையதளத்தைப் பொறுத்தவரை ‘ஃபோர்ப்ஸ் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி’ என்றொரு நம்பிக்கை இணையவாசிகளிடம் உண்டு. ஆனால், இப்போது நடிகர் சல்மான்கான், ‘‘ஃபோர்ப்ஸ் இணையதளம் சொன்னது ரொம்ப காமெடியாக இருக்கிறது.’’ என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

சென்ற வருடம், இதே ஃபோர்ப்ஸ், உலகில் அதிகமாக சம்பாதிப்பவர்களின் பட்டியலில் சல்மான்கானை 14-வது இடத்தில் வெளியிட்டிருந்தது. அப்போதுகூட எந்த எதிர்ப்பும் சொல்லாத சல்மான்கான், 71-வது இடத்துக்குப் பொங்கியிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் நெட்டிசன்கள். 

ஃபோர்ப்ஸ் இந்தத் தகவலை திங்கட்கிழமை வெளியிட்டது. நேற்று செவ்வாய்க் கிழமை இது பற்றி ஷாரூக்கானும் சல்மானும் மனம் திறந்து பேசினார்களாம். ‘‘சம்பாதிச்ச பணம் எல்லாம் எங்க போச்சுனு தெரியலை. உன் இடத்தை யாராலயும் பிடிக்க முடியாது போலயே! வாழ்த்துகள்! ரொம்ப நாளா ஒரு வீடு வாங்கணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். அதுக்கு பணம் கொஞ்சம் ஷார்ட்டேஜா இருக்கு. இந்த நேரத்துல இவங்க அதிகமா சம்பாதிக்கிறவங்க லிஸ்ட்ல என் பேரைச் சேர்த்துட்டாங்களே!’’ என்று ஷாரூக்கானிடம் புலம்பினாராம் சல்மான்கான்.

மேலும் இது பற்றி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார். ‘‘சத்தியமாக என்னிடம் பணமே இல்லை. நான் சம்பாதித்த பணமெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. முன்பு வீடு வாங்க சில லட்சங்கள் பற்றாக்குறையாக இருந்தது. இப்போது சில கோடிகள் பற்றாக்குறையாக இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். ஒரு படம் 500 கோடி வசூலிக்கிறது என்றால், அதில் நடிக்கும் நடிகர் - நடிகையருக்குக் குறைந்தபட்ச பணமே கிடைக்கும். இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை.’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

பாலிவுட்டில் அதிகமாகப் பணம் கொட்டிக் கிடக்கும் சூப்பர் ஸ்டார்கள் - ஷாரூக்கும் சல்மானும்தான். இது இந்தியாவுக்கே தெரியும். இப்படிப்பட்ட நேரத்தில் பணம் இல்லை என்று 'மிடில் க்ளாஸ் மாதவன்' மாதிரி சல்மான் புலம்பியிருப்பதை காமெடியாகவே பார்க்கிறார்கள் ரசிகர்கள். சினிமா மட்டுமில்லாமல், பல பிஸினஸ்களுக்கும் அதிபதி சல்மான். விளம்பரங்களில் இருந்தும் வருமானம் வருவது தனிக்கதை. இது மட்டுமில்லாமல், ‘பீயிங் ஹ்யூமன்’ என்னும் அறக்கட்டளையையும் நடத்தி துணி விற்பனை செய்து வருகிறார் சல்மான்.

‘‘அந்தப் பணமெல்லாம் எங்கே?’’ என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ‘‘பீயிங் ஹ்யூமன் சம்பாதிப்பதற்கான நிறுவனம் இல்லை. இந்தியாவில் உள்ள ஏழை/எளிய குழந்தைகளின் கல்விக்கும் நலனுக்கும் வழிசெய்யும் நிறுவனம். பீயிங் ஹ்யூமன் மூலம் விற்பனையாகும் உடைகளின் பணத்தில் இருந்து எங்களுக்குக் கிடைக்கும் பணம், வரி கட்டுவதற்கே சரியாக இருக்கிறது. அதில் என்னுடைய பார்ட்னருக்குப் போக மீதமுள்ள சொற்ப தொகையில்தான் பீயிங் ஹ்யூமனை நடத்துகிறோம். இது போக சைக்கிள் விற்பனை, நகை விற்பனை எல்லாவற்றிலும் கிடைக்கும் பணத்தையும் ட்ரஸ்ட்டுக்கே பயன்படுத்துகிறேன். இதைச் சொன்னால் நம்பவா போகிறார்கள்?!’’ என்றும் புலம்பித் தள்ளிவிட்டார் ‘ட்யூப்லைட்’ நடிகர் சல்மான்கான்.

ஒருவேளை - சினிமாவுக்காக ஏற்றப்பட்ட GST வரிக்கு எதிராகத்தான் இப்படிப் புலம்புகிறாரோ என்றும் நெட்டிசன்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸுக்கு எதிராக மீம்ஸ்கள் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு