Published:Updated:

`போராட்டத்தின்போது உருவான காதல்!' அரசியல்வாதியைத் திருமணம் செய்தார் நடிகை ஸ்வரா பாஸ்கர்

ஸ்வரா பாஸ்கர் - பஹத் அகமத்

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமாஜ்வாடி கட்சிப் பிரமுகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Published:Updated:

`போராட்டத்தின்போது உருவான காதல்!' அரசியல்வாதியைத் திருமணம் செய்தார் நடிகை ஸ்வரா பாஸ்கர்

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமாஜ்வாடி கட்சிப் பிரமுகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஸ்வரா பாஸ்கர் - பஹத் அகமத்

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல் பிரமுகர் பஹத் அகமத்தைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக ஸ்வரா பாஸ்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் இருவருக்கும் இடையே எப்படி காதல் உருவானது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அவர் பதிவிட்டுள்ள வாசகத்தில், `சில சமயங்களில் உங்களுக்கு பக்கத்தில் இருந்த ஒன்றை வெகு தொலைவில் தேடுவீர்கள். நாங்கள் அன்பைத் தேடினோம். ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டோம். பஹத் அகமத்தை என் இதயம் வரவேற்கிறது' என்று குறிப்பிட்டு இருந்தார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் போராட்டம் நடந்த போது அதில் ஸ்வரா பாஸ்கரும் பஹத் அகமத்தும் கலந்து கொண்டனர்.

ஸ்வரா பாஸ்கர் - பஹத் அகமத்
ஸ்வரா பாஸ்கர் - பஹத் அகமத்

அதில் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதன் பிறகு அதுவே காதலாக மாறியது. ஸ்வரா பாஸ்கர் வெளியிட்ட வீடியோவில் இருவரும் டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டது, முதலில் செல்ஃபி எடுத்துக்கொண்டது போன்றவையும் இடம் பெற்றிருந்தன. திருமணத்திற்குப் பிறகு பஹத் கையை பிடித்துக்கொண்டு ஸ்வரா பாஸ்கர் வருவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இருவரும் கடந்த 6ம் தேதி கோர்ட்டில் ஆவணங்களைத் தாக்கல் செய்து நேற்று பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

இதில் இருதரப்பினரின் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர். அடுத்த மாதம் டெல்லியில் திருமண வரவேற்பு வைக்கத் திட்டமிட்டுள்ளனர். பஹத் அகமத் மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணித்தலைவர்.