Published:Updated:

The Kerala Story: "படத்தின் கதை என்னுடையது. ஆனால்..."- மீண்டும் கிளம்பும் புதிய சர்ச்சை

யது விஜயகிருஷ்ணன்

"2021-ல் 'லவ் ஜிஹாத்' சப்ஜக்டை வைத்து இந்தியில் படம் எடுக்கத் தகுந்த ஸ்கிரிப்ட் உள்ளதா என்று சுதிப்தோ சென் என்னிடம் கேட்டார். பின் ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை எழுதிக்கொடுத்தேன்." - யது விஜயகிருஷ்ணன்

Published:Updated:

The Kerala Story: "படத்தின் கதை என்னுடையது. ஆனால்..."- மீண்டும் கிளம்பும் புதிய சர்ச்சை

"2021-ல் 'லவ் ஜிஹாத்' சப்ஜக்டை வைத்து இந்தியில் படம் எடுக்கத் தகுந்த ஸ்கிரிப்ட் உள்ளதா என்று சுதிப்தோ சென் என்னிடம் கேட்டார். பின் ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை எழுதிக்கொடுத்தேன்." - யது விஜயகிருஷ்ணன்

யது விஜயகிருஷ்ணன்

சுதிப்தோ சென் இயக்கத்தில், அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. 'இது ஆபத்தான பிரசாரப் படம்' உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் அப்போதே எழுந்தன. இது தொடர்பாக வழக்குகளும் பதியப்பட்டன. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் திரையரங்குகளிலிருந்து ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது.

தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி
இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் திரைக்கதைத் தனது படைப்பு என்று இளம் மலையாளத் திரைக்கதை ஆசிரியர் யது விஜயகிருஷ்ணன் கூறி இருக்கிறார். செய்தி சேனல் நடத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய யது விஜயகிருஷ்ணன் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு அவர்தான் கதை எழுதியதாகவும், ஆனால் படக்குழு நன்றி அட்டையில்கூட அவரது பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “2017-ல் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென்னுடன் இணைந்து 'லவ் ஜிஹாத்' தொடர்பான ஒரு ஆவணப்படத்தில் பணிபுரிந்தேன். 2021-ல் இதே சப்ஜக்டை வைத்து இந்தியில் படம் எடுக்கத் தகுந்த  ஸ்கிரிப்ட் உள்ளதா என்று சுதிப்தோ சென் என்னிடம் கேட்டார். பின் ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை எழுதிக்கொடுத்தேன். அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் ஸ்கிரிப்ட்டை முழுமையாக எழுதத்  தொடங்கினேன். எழுதி முடித்து ஸ்கிரிப்ட்டை ஒப்படைத்தவுடன், ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று எனது பெயரைக் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தைத் தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது.

யது விஜயகிருஷ்ணன்
யது விஜயகிருஷ்ணன்

புதிய ஒப்பந்தம் போடப்படும் என்று அவர்கள் கூறியதை அடுத்துப் படத்தின் லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட பணிகளிலும் தொடர்ந்து ஒத்துழைப்பு தந்து பணியாற்றினேன். ஆனால் அவர்கள் போட்ட புதிய ஒப்பந்தத்தில் ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பதை நீக்கிவிட்டு 'ஆலோசகர்' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். பின்னர் சம்பளம், ஒப்பந்த விதிமுறைகள் காரணமாகப் படத்திலிருந்து நான் பின்வாங்கிவிட்டேன். படம்  வெளியானதும் நன்றி அட்டையில் என் பெயரைச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அந்த இடத்திலும் எனது பெயரைக் குறிப்பிடவில்லை.

‘தி கேரளா ஸ்டோரி' படத்தைப் பொறுத்தவரைக்கும் பெரிய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம். நான் படத்திற்கு எதிரானவன் அல்ல. அதனால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. தயாரிப்பாளர்கள் இனி இந்த விஷயத்தில் ஏதாவது செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். 

யது விஜயகிருஷ்ணன்  வெளியிட்ட வாட்ஸ்அப் சாட்
யது விஜயகிருஷ்ணன் வெளியிட்ட வாட்ஸ்அப் சாட்
யது விஜயகிருஷ்ணன்  வெளியிட்ட வாட்ஸ்அப் சாட்
யது விஜயகிருஷ்ணன் வெளியிட்ட வாட்ஸ்அப் சாட்
மேலும் இயக்குநர் சுதிப்தோ சென்னுடன் வாட்ஸப்பில் ஸ்கிரிப்ட் தொடர்பாக உரையாடியதைத் தற்போது யது விஜயகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.