மும்பையில் நடிகர் சன்னி கபூர் மற்றும் குனீத் மோங்காவின் திருமணம் நேற்று நடந்தது. திருமணத்துக்கு முன்பு புதுமணத் தம்பதி பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பார்ட்டியில் நடிகை வித்யா பாலன், தன் கணவர் சித்தார்த் ராய் கபூருடன் கலந்துகொண்டார். அவருடன் பார்ட்டி நடக்கும் அரங்கத்துக்குள் நுழைந்தபோது எதிர்திசையில் இருந்து வந்த ஒருவரின் கையில் வித்யா பாலனின் சேலையின் முனைப்பகுதி பட்டது.
உடனே அந்த நபர் சேலையை அப்படியே விடாமல் அதைப் பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வித்யாபாலன் உடனே குனிந்து சேலை மேற்கொண்டு நழுவாமல் பார்த்துக் கொண்டார். அதோடு சுவர் பக்கமாகத் திரும்பி நின்று தனது சேலையை சரி செய்து கொண்டார்.

சேலையைப் பிடித்து இழுத்த நபர் எதுவும் சொல்லாமல் அப்படியே சென்றுவிட்டார். வித்யா பாலனும் பெருந்தன்மையாக அந்த நபரை எதுவும் சொல்லவில்லை. ஆனால், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி இருக்கிறது. அந்த வீடியோவைப் பார்த்த வித்யா பாலனின் ரசிகர்கள், சேலையை இழுத்த நபர் மன்னிப்புக்கூட கேட்காமல் சென்றதை சுட்டிக்காட்டியுள்ளனர். சமூக வலைதளத்தில் பலரும், `சேலையை இழுத்த நபர் மன்னிப்புக் கேட்காமல் சென்றதிலிருந்து அந்த நபர் வேண்டுமென்றேதான் சேலையைப் பிடித்து இழுத்திருப்பதாகத் தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர். பலர், `இந்த சம்பவம் ஒரு விபத்து என்பதை ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பார்ட்டியில் கரண் ஜோகர், ஏக்தா கபூர், நேஹா துபியா, ரியா சக்கரவர்த்தி உட்பட பாலிவுட் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.