கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விலகி ஒளிர்ந்த நட்சத்திரம்!

இர்ஃபான் கான்
பிரீமியம் ஸ்டோரி
News
இர்ஃபான் கான்

இர்ஃபானின் வெற்றிக்கு இன்னொரு காரணம் வசன உச்சரிப்பு.

பாலிவுட் ஒரு கோலாகல கனவுத் தொழிற்சாலை. அதன் தயாரிப்புகளுள் பெரும்பான்மையானவர்கள் ஒரே சட்டகத்திற்குள் அடங்கி விடுவார்கள், கிட்டத்தட்ட ஒரே மையத்தை நோக்கிச் சுழலும் வெவ்வேறு கிரகங்களைப் போல. ஆனால் எப்போதாவது அந்தத் தொழிற்சாலையிலிருந்து தெறித்தெழும் நட்சத்திரம் தனக்கென ஒரு பாதை, ஈர்ப்புவிசை கொண்டு மின்னிப் புதுவெளிச்சம் பாய்ச்சும். இர்ஃபான் கான் அப்படியான ஒரு நட்சத்திரம்.

நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் படித்துமுடித்து வெளியே வந்த அடுத்த ஆண்டே மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ பட வாய்ப்பு. ரிலீஸ் ஆனபோது வெறும் இரண்டே காட்சிகள்தான் இர்ஃபானுடை யவை. படத்தில் அவரிடம் கடிதம் எழுதித்தரச் சொல்லும் சிறுவன் கிருஷ்ணா அந்தக் கடிதம் எப்படியாவது உரிய இடத்தை அடைந்துவிடும் என்ற நம்பிக்கையோடு திரும்பி நடப்பான். இர்ஃபானும் அப்படித்தான், உரிய உயரத்தை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தார்.

90கள் முழுக்க நிறைய சீரியல்கள், படங்கள்... எதுவுமே அவருக்கான வெளிச்சத்தைத் தரவில்லை. 2001-ல் வெளியான ‘வாரியர்’ படம்தான் அவரின் முதல் பிரேக். அதன்பின் இந்த நிஜ வாரியருக்கும் வெற்றி மேல் வெற்றிகள்.

இர்ஃபான் கான்
இர்ஃபான் கான்

கண்களால் மட்டுமே உணர்ச்சிகளைப் பார்வையாளர் களிடம் கடத்துவது ஒரு மாயக் கலை. அதில் இர்ஃபான் வித்தகர். இதற்காகவே அவர் வரும் காட்சிகளை நிறுத்தி நிறுத்திச் சிலாகித்து, பின், தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளமுண்டு.

இர்ஃபானின் வெற்றிக்கு இன்னொரு காரணம் வசன உச்சரிப்பு. மும்பையின் நடுத்தர வயது சாஜன் பெர்ஃனாண் டஸாக லன்ச்பாக்ஸில் அவர் பேசும் இந்திக்கும், உதய்ப்பூரின் ஐம்பதை நெருங்கும் சம்பக் பன்சாலாக ‘அங்கிரேஸி மீடியம்’ படத்தில் அவர் பேசும் இந்திக்கும் அவ்வளவு வித்தியா சங்கள் இருக்கும். வங்காளியாக, பாகிஸ்தானியாக, தத்ரூபமாய் அவர் படத்திற்குப் படம் மாறி நின்றதால்தான் தொடர்ந்து ஹாலிவுட் இவர் கால்ஷீட்டைக் கேட்டுக்கொண்டே இருந்தது.

2017-ல், ‘இர்ஃபான் என்றாலே சீரியஸான படங்களில் நடிப்பவன்’ என்கிற இமேஜ் வந்துவிட்டது என சுயபகடி செய்தவர், ஃபீல் குட் படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். ‘ஹிந்தி மீடியம்’, ‘க்வாரிப் க்வாரிப் சிங்கிள்’, ‘கார்வான்’ போன்ற படங்கள் அந்த சீசனில் வெளியானவைதான். அதன்பின் புற்றுநோயால் முடங்கி, பின் அதிலிருந்து மீண்டவர், ‘முன் போல நிறைய நேரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கமுடிய வில்லை. சீக்கிரமே தளர்ந்து போய்விடுகிறேன். அதனால் ஹியூமர் சப்ஜெக்ட்களில் நடிக் கலாம் என இருக்கிறேன்’ என தன் நெருங்கிய நட்புவட்டா ரத்தில் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் இளைஞனாகத் தொடங்கிய இர்ஃபானின் சினிமாப் பயணம் அவரின் கடைசிப்படமான அங்கிரேஸி மீடியத்தில் அதே ராஜஸ்தானின் உதய்ப்பூரைச் சேர்ந்த பாசக்கார அப்பாவாக ஒரு நிறைவான முழுவட்டம் போட்டு முற்றுப்பெற்றுவிட்டது.

‘Everything is fine here, I hope you are doing fine too!’ - இர்ஃபான் பேசிய முதல் சினிமா வசனத்தின் ஆங்கில வடிவம் இது. அந்த இறவாக்கலைஞனுக்கும் இறுதி யாக இதைச் சொல்லித்தான் வழியனுப்ப வேண்டும்.