Published:Updated:

"விவாகரத்து முடிவல்ல; இருவர் வாழ்விலும் புதிய தொடக்கம்!" - ஆமீர் கான், கிரண் ராவ் விளக்கம்

“விவாகரத்து முடிவல்ல; இருவர் வாழ்விலும் புதிய தொடக்கம்” இரண்டாவது மனைவியுடன் உறவை முறித்துக்கொண்ட பாலிவுட் நடிகர் ஆமீர் கான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் அவரது மனைவி கிரண் ராவ்வும் தங்களது 15 ஆண்டு திருமண வாழ்வை முடித்துக்கொண்டு விவாகரத்து பெற்றுள்ளதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களது மகன் ஆசாத் கான்-ஐ இருவரும் இணைந்து இணை பெற்றோர்களாக வளர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

2000-ம் ஆமீர் கானின் 'லகான்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கிரண். இருவரும் காதலித்து 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2002-ம் ஆண்டு ஆமீர் கானுக்கும் அவரது முன்னாள் காதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகை அதிதி ராவ் ஹைதரியின் உறவினரான கிரண் 2010-ம் ஆண்டு ஆமீர் கானை வைத்து 'தோபி காட்' என்னும் படத்தை இயக்கியுள்ளார். தற்போது ஆமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படத்தின் தயாரிப்பாளரும் இவரே. ஆமீர் கானின் திரை வாழ்விலும் தனி வாழ்விலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார் கிரண்.

ஆமீர் கான் - கிரண் ராவ் விவாகரத்து
ஆமீர் கான் - கிரண் ராவ் விவாகரத்து

ஆமீர் - கிரண் விவாகரத்து பெரும் அதிர்ச்சி அளித்தாலும் இருவரும் பரஸ்பர ஒப்புதுதலுடனும் புரிதலுடனும் விவாகரத்து பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”15 ஆண்டு கால எங்கள் உறவு, காதல், நம்பிக்கை மற்றும் மரியாதையால் மட்டுமே வளர்ந்துள்ளது. அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்கள் வாழ்வில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம். கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் மகன் ஆசாதுக்கு நல்ல பெற்றோராக இருப்போம். நாங்கள் விரும்பினால் திரைப்படங்களிலும் தொடர்ந்து ஒன்றாகப் பணியாற்றுவோம். பானி அறக்கட்டளை பணிகளை ஒன்றாகவே தொடருவோம். இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல; இருவர் வாழ்விலும் புதியதொரு துவக்கம். எங்கள் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில்தான் ஆமீர் கான் - கிரண் ராவின் 15-வது ஆண்டு திருமண நாள் புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில் அவர்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு