Published:Updated:

"என் வாழ்க்கையில் வேறு பெண் இல்லை; இப்போதும் நான் அவரை அதிகமாகக் காதலிக்கிறேன்"- அமீர் கான் உருக்கம்

அமீர் கான்-கிரண்

வேறு திருமணம் செய்து கொள்வதற்காக எனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்று நடிகர் அமீர் கான் தெரிவித்திருக்கிறார்.

"என் வாழ்க்கையில் வேறு பெண் இல்லை; இப்போதும் நான் அவரை அதிகமாகக் காதலிக்கிறேன்"- அமீர் கான் உருக்கம்

வேறு திருமணம் செய்து கொள்வதற்காக எனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்று நடிகர் அமீர் கான் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அமீர் கான்-கிரண்

நடிகர் அமீர் கான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இருவரும் 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் அவரின் விவாகரத்து ரத்து அறிவிப்பு பாலிவுட்டில் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இயக்குநரான கிரண் ராவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அமீர் கானுக்கு ஏற்கனவே ரீனா தத்தா என்ற மனைவி இருந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகுதான் அமீர் கான் கிரண் ராவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அமீர்கான் தனது மனைவியை ஏன் பிரிந்தார் என்பது குறித்து பாலிவுட் நிருபர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார்.

ரீனா தத்தா-அமீர் கான்
ரீனா தத்தா-அமீர் கான்

கிரண் பல ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் தனக்கு குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இல்லை என்று தெரிவித்துள்ளார். நாங்கள் குடும்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதுகூட, தனக்கு இதில் ஈடுபாடு இல்லை என்று கூறுவார். கிரண் என்னிடம், நான் வித்தியாசமான மனிதர் என்றும், நான் உங்களை மாற்ற விரும்பவில்லை என்றும் நான் அப்படி மாற்ற நினைத்திருந்தால், நீங்கள் நான் காதலித்த நபராக இருக்கமாட்டீர்கள் என்று சொன்னார். அவர் எனது அறிவை நேசிப்பதாகவும், எனவே அவர் ஒரு போதும் என்னை மாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால் கிரண் 7 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போது எதிரொலிக்கிறது. கடந்த 6-7 மாதத்தில் என்னிடம் அதிகப்படியான மாற்றத்தைக் காண்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரணும் நானும் மிகவும் அதிகமாகக் காதலிக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறோம். உண்மையில் நானும், கிரணும் அதிகப்படியாக ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். ஆனால் கணவன் மனைவி உறவில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. திருமண பந்தத்திற்கு நாங்கள் மதிப்பு கொடுக்க விரும்புகிறோம். ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கிறோம். நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். நாங்கள் அருகில் வசிக்கிறோம். ஆனால் கணவன் மனைவியாக இல்லாமல் இருக்கிறோம்.

அமீர் கான்
அமீர் கான்

எனது முன்னாள் மனைவி ரீனா தத்தாவின் விவாகரத்துக்குக் கிரண் காரணம் கிடையாது. ரீனா தத்தாவும் நானும் பிரிந்தபோது எனது வாழ்க்கையில் வேறு யாரும் இல்லை. ரீனாவை விவாகரத்து செய்வதற்கு முன்பே நானும், கிரணும் சந்தித்துக்கொண்டதாக ஏராளமானோர் நினைக்கின்றனர். அதில் உண்மை இல்லை. நானும் கிரணும் சந்தித்துக்கொண்டோம். ஆனால் ரீனா தத்தாவுடனான விவாகரத்துப் பிறகு பல நாள்கள் கழித்தே நாங்கள் நண்பர்களாக மாறினோம்" என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரணை விவாகரத்து செய்வதற்கு வேறு ஒரு பெண் உங்களது வாழ்க்கையில் வந்தது காரணமா என்று கேட்டதற்கு, `எனது வாழ்க்கையில் இப்போது யாரும் கிடையாது' என்று தெரிவித்தார். அமீர் கானும், கிரணும் விவாகரத்து செய்யும்போது இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், `விவாகரத்து மூலம் புதிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம் என்றும், 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தது மிகவும் இனிமையான அனுபவம் என்றும், இனி புதிய அத்தியாயத்தைத் தொடங்கப்போகிறோம். எங்களது மகனுக்கு தொடர்ந்து நல்ல பெற்றோராக இருப்போம் என்றும் தெரிவித்தனர். கிரணும், அமீர் கானும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்.

அமீர் கான்
அமீர் கான்

அமீர் கான் முதல் மனைவி ரீனா தத்தாவை 1986-ம் ஆண்டு திருமணம் செய்து 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். முதல் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் தற்போது தாயுடன் வசித்து வருகின்றனர். 2005-ம் ஆண்டுதான் கிரணைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேருடனும் 16, 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அமீர் கான் அவரைப் பிரிந்துவிட்டார். பாத்திமா சகா ஷேக் என்பவரை அமீர் கான் காதலிப்பதாக செய்திகள் வெளியானதே அமீர் கான் இத்தகைய விளக்கத்தை அளிக்கக் காரணம் என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism