Published:Updated:

"கடன் தொல்லையால் பள்ளிக் கட்டணம் 8 ரூபாயைக் கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டேன்!"- ஆமீர் கான் உருக்கம்

ஆமீர் கான்

நடிகர் ஆமீர் கான் தனது சிறு வயதில் பள்ளிக்கட்டணம் 8 ரூபாயைக் கூட செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"கடன் தொல்லையால் பள்ளிக் கட்டணம் 8 ரூபாயைக் கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டேன்!"- ஆமீர் கான் உருக்கம்

நடிகர் ஆமீர் கான் தனது சிறு வயதில் பள்ளிக்கட்டணம் 8 ரூபாயைக் கூட செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஆமீர் கான்
நடிகர் ஆமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமீர் கானின் படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் சமூக வலைதளத்தில் 'லால் சிங் சத்தா' படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆமீர் கான் அளித்துள்ள பேட்டியில், தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில், "நான் குழந்தையாக இருந்தபோது எனது குடும்பம் கடன் தொல்லையில் கஷ்டப்பட்டது. சுமார் 8 ஆண்டுகள் எங்களுக்குப் போதாத காலமாகிப் போனது. பள்ளி நாள்களில் கட்டணத்தைக் கட்டவே கஷ்டப்பட்டேன். 8-ம் வகுப்பில் படித்த போது கட்டணமே வெறும் 8 ரூபாய்தான். ஆனால் அந்தப் பணத்தைக் கூட பள்ளி முதல்வர் எச்சரிக்கை விடுத்த பிறகுதான் நானும் எனது சகோதரர்களும் கட்டியிருக்கிறோம்.

ஆமிர் கான் - லால் சிங் சத்தா
ஆமிர் கான் - லால் சிங் சத்தா

அதுவும் பள்ளி முதல்வர் கட்டணம் செலுத்தவில்லை என்பதைக் காலை அசெம்பளி கூட்டத்தில் தெரிவிப்பேன் என்று எச்சரிக்கை செய்த பிறகுதான் செலுத்த முடிந்தது" என்று கூறிய போது அவரது கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது. ஆமீர் கானுடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர் ஆவர். இதில் மூத்தவரான ஆமீர் கான் 1973-ம் ஆண்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

ஆமீர் கான் 1988ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். 'கயாமத் சே கயாமத் தக்' என்ற திரைப்படத்தில் ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து ஹீரோவாக தன் முதல் படத்தில் நடித்தார். அதன் பிறகு பல வெற்றிப்படங்களைக் கொடுத்த ஆமீர் கான், பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். 'பர்ஃபெக்ஷனிஸ்ட்' என்று பெயர் எடுத்திருக்கும் அவரின் படங்கள் எப்போதுமே வசூல் சாதனைகளைப் படைக்கத் தவறியதில்லை.