Published:Updated:

``நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, காயப்படுத்தியிருந்தால்..." - ஆமீர் கான்

aamir khan

நடிகர் ஆமீர் கான், தான் யாரையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

``நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, காயப்படுத்தியிருந்தால்..." - ஆமீர் கான்

நடிகர் ஆமீர் கான், தான் யாரையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Published:Updated:
aamir khan
நடிகர் ஆமீர் கான் நடித்துள்ள `லால் சிங் சத்தா' படம் நாளை மிகவும் எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வருகிறது. அவரது படத்திற்கு போட்டியாக நடிகர் அக்‌ஷய் குமாரின் `ரக்‌ஷா பந்தன்' படமும் திரைக்கு வருகிறது.

ஆமீர் கான் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று கோரி சமூக வலைதளத்தில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆமீர் கான் மனைவி கிரண் ராவ் 2015ம் ஆண்டு நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்துவிட்டதால் நாங்கள் வேறு நாட்டிற்கு செல்வது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவித்திருந்தார். இக்கருத்தை மேற்கோள் காட்டி தற்போது லால் சிங் சத்தாவை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர். இது குறித்து ஆமீர் கான் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசும்போது கருத்து தெரிவித்திருந்தார். அதில் ''யாரையாவது எதாவது ஒரு வகையில் நான் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. யாராவது எனது படத்தை பார்க்க விரும்பவில்லை எனில் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆமிர் கான்
ஆமிர் கான்

Forrest gump என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் லால்சிங் சத்தாவில் ஆமீர் கானுக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடித்துள்ளார். இப்படத்திற்கு அதிக விளம்பரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து இப்படம் குறித்து ஆன்லைனில் விமர்சிப்பது போன்ற வேலையில் தயாரிப்பு தரப்பு ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன் கடுமையாக மறுத்துள்ளார். லால் சிங் சத்தா படத்தை ஆமீர் கான் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமீர் கானுக்கு முதல் முறையாக படம் வெளியாவதால் இப்படம் வெற்றி பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆமீர் கான் தரப்பில் ஏற்பட்டுள்ளது.