Published:Updated:

இந்து முறைப்படி பூஜை செய்த ஆமிர் கான்; வைரலாகும் புகைப்படங்களின் பின்னணி என்ன?

பூஜையில் ஆமிர் கான்

நடிகர் ஆமிர் கான் தனது அலுவலகத்திற்கு இந்து முறைப்படி பூஜை செய்தார். இந்த நிகழ்வில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவும் கலந்துகொண்டார்.

இந்து முறைப்படி பூஜை செய்த ஆமிர் கான்; வைரலாகும் புகைப்படங்களின் பின்னணி என்ன?

நடிகர் ஆமிர் கான் தனது அலுவலகத்திற்கு இந்து முறைப்படி பூஜை செய்தார். இந்த நிகழ்வில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவும் கலந்துகொண்டார்.

Published:Updated:
பூஜையில் ஆமிர் கான்

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த 'லால் சிங் சத்தா' படம் எதிர்பார்த்த அளவு வசூலைக் கொடுக்கவில்லை. இதனால் மிகவும் அதிருப்தியில் இருக்கும் ஆமிர் கான் தற்காலிகமாக நடிப்பிற்கு இடைவெளி விட்டிருக்கிறார். அதோடு தனது குடும்பத்தோடு கூடுதல் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அடுத்து ரீமேக் படம் ஒன்றில் ஆமிர் கான் நடிப்பதாக இருந்தார். ஆனால் தனது முடிவை மாற்றிக்கொண்டு அதில் நடிக்காமல் தயாரிப்பாளராக மட்டும் இருப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்.

பூஜையில் ஆமிர் கான்
பூஜையில் ஆமிர் கான்

இதற்காக மும்பையில் உள்ள தனது அலுவலகத்திற்கு இந்து முறைப்படி கலச பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். இப்பூஜையில் ஆமிர் கான் மராத்தியர்கள் பாரம்பரியமாக அணியும் தொப்பி அணிந்து கொண்டு தனது முன்னாள் மனைவி கிரண் ராவுடன் பூஜையில் கலந்து கொண்டார்.

ஆமிர் கானே பூஜையில் ஆர்த்தி எடுத்து சாமி கும்பிட்டார். அலுவலகம் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பூஜையில் ஆமிர் கானின் ஊழியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். எதற்காகப் பூஜை போடப்பட்டது என்று தெரியாவிட்டாலும், இப்பூஜைக்குப் பிறகு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. ஆமிர் கான் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்களை 'லால் சிங் சத்தா' இயக்குநர் அத்வைத் சந்தன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இப்படங்களைப் பார்த்து சிலர், ஆமிர் கான் தன் படங்களின் தோல்வி காரணமாகவே இப்பூஜையைச் செய்தார் என்று தெரிவித்து வருகின்றனர். பலர், "இது மத நல்லிணக்கத்தின் அடையாளம்" என்று ஆமிர் கானைப் பாராட்டி வருகின்றனர்.

பூஜையில் ஆமிர் கான்
பூஜையில் ஆமிர் கான்

இதனிடையே 'சலாம் வெங்கி' படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்து ஆமிர் கானிடம் "எப்போது மீண்டும் நடிக்க வருவீர்கள்?" என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருவேன். இப்போதைக்கு எதிலும் நடிக்கவில்லை. நீண்ட நாள்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். இப்போது எனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். 'பானி பவுண்டேசன்' பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் 'சலாம் வெங்கி'யில் சிறிய கதாபாத்திரத்தில் என்னைக் காணலாம். இப்படத்தில் எனக்கு ரேவதி வாய்ப்பு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.