Published:Updated:

``நம் குடும்பத்துக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறாய்" - ஐஸ்வர்யா ராயிடம் நெகிழ்ந்த ஜெயா பச்சன்

ஐஸ்வர்யா ராய்

நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தின் மற்றொரு சிறப்பாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

``நம் குடும்பத்துக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறாய்" - ஐஸ்வர்யா ராயிடம் நெகிழ்ந்த ஜெயா பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தின் மற்றொரு சிறப்பாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

Published:Updated:
ஐஸ்வர்யா ராய்

இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விருதுகளைப் அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் பலமுறை பெற்றிருக்கின்றனர். பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர். அவரது தந்தை ராய் பச்சனுக்கு ஹிந்தி இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததற்காக பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு 'பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டது. இந்த வரிசையில் ஐஸ்வர்யா ராய்க்கு 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இது அமிதாப் பச்சன் குடும்பத்தின் ஐந்தாவது பத்ம விருதாகும். மேலும் இதன் மூலம் குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை என்ற பெருமையும் பெற்றவர் ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா ராயின் குடும்பப் புகைப்படம்
ஐஸ்வர்யா ராயின் குடும்பப் புகைப்படம்

இந்நிலையில் இந்த நெகிச்சியான தருணத்தை நினைவு கூர்ந்த ஐஸ்வர்யா, "என்னுடைய பணிக்காகப் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த சினிமா துறையில் குறைந்த வயதில் பத்மஸ்ரீ பெற்றவர் நபர் என்று என்னை எல்லோரும் பாராட்டினார்கள். இதற்குக் காரணம் என் பெற்றோர்கள், இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்கானது. அந்த மகிழ்ச்சியானத் தருணத்தில் என் மாமியார்( ஜெயா பச்சன்) 'நம் குடும்பத்தின் ஐந்தாவது பத்ம விருதை வரவேற்கிறோம்' என்று கூறியது மறக்கமுடியாத தருணம். மேலும், அபிஷேக் பச்சன் ஒரு நல்ல கணவராக என்னுடைய எல்லா சூழ்நிலையிலும் எப்போதும் எனக்கு ஆதவராக இருப்பவர். உண்மையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று நினைக்கிறன்" என்று கூறினார்.