Published:Updated:

``என் 22 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது!" - நடிகர் அமிதாப்பச்சனிடம் நெகிழ்ந்த ரசிகை

அமிதாப்பச்சன்

ஆனால் இப்போது இறைச்சி, மீன், இனிப்பு வகைகள், அரிசி சாப்பாடு, பான் போன்றவற்றை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் - அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப்பன் தனது 80 வயதிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துவதோடு, சினிமாவிலும் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் கோன் பனேகா குரோர்பதி தொடரை நடத்தி வருகிறார்.

இதில் பங்கேற்ற மும்பையை சேர்ந்த வித்யா உதய் என்ற பெண்ணுடன் கலந்துரையாடினார் அமிதாப்பச்சன். இதில் வித்யாவிடம், `உங்களது சாப்பாட்டு பழக்க வழக்கம் எப்படி?' என்று கேட்டார். `நான் அசைவ உணவு சாப்பிடுவேன் என்றும், அதிகமாக மீன் சாப்பிடுவது பிடிக்கும்!' என்று தெரிவித்தார். அதோடு உங்களது சாப்பாடு எப்படி என்று வித்யா அமிதாப்பச்சனிடம் கேட்டார். `ஜெயாஜிக்கு மீன் அதிகமாக பிடிக்குமாமே!' என்றும் கேட்டார். அதற்கு, `ஆம் ஜெயாவிற்கு மீன் மிகவும் அதிகமாகப் பிடிக்கும்! என்றார் அமிதாப். `உங்களுக்க மீன் பிடிக்குமா?' என்று கேட்டதற்கு, `நான் மீன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

``என் 22 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது!" - நடிகர் அமிதாப்பச்சனிடம் நெகிழ்ந்த ரசிகை

பல உணவுப் பதார்த்தங்களை இப்போது நிறுத்திவிட்டேன். இளம் வயதில் அனைத்தையும் சாப்பிடவேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் இப்போது இறைச்சி, மீன், இனிப்பு வகைகள், அரிசி சாப்பாடு, பான் போன்றவற்றை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். மேற்கொண்டு பேச விரும்பவில்லை!' என்று தெரிவித்தார். உடனே பேசிய வித்யா, `மக்கள் இங்கு பணம் சம்பாதிக்க வருகின்றனர். ஆனால் நான் உங்களை பார்க்க வந்தேன்' என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமிதாப்பச்சன், `என்னை வேறு எந்த இடத்திலும் சந்திக்கலாம்!' என்று தெரிவித்தார். உங்களை சந்திக்க 22 ஆண்டு கால போராட்டம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது என்று தெரிவித்தார். நடிகர் அமிதாப்பச்சன் நடித்த ஊஞ்சாய் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.