Published:Updated:

`நடமாடவும், மூச்சுவிடவும் சிரமமாக இருக்கிறது' பிராஜக்ட் கே படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் காயம்

அமிதாப் பச்சன்

ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Published:Updated:

`நடமாடவும், மூச்சுவிடவும் சிரமமாக இருக்கிறது' பிராஜக்ட் கே படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் காயம்

ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 80 வயதிலும் விடாது கடுமையாக உழைத்து வருகிறார். இடைவிடாது படங்களில் நடித்து வருவதோடு, விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார். தற்போது பிராஜக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

நேற்று படப்பிடிப்பு நடந்தபோது அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அவரது விலா எலும்பு உடைந்துவிட்டது. இதனால் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வருவதாக அமிதாப் பச்சன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"வலது பக்க விலா எலும்பு முறிவு ஏற்பட்டதோடு தசை கிழிந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். காயம் ஏற்பட்டவுடன் உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஐதராபாத் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அமிதாப்பச்சனுக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்துப்பார்த்தனர். இதில் எலும்பு முறிவு இருந்தது தெரிய வந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு அமிதாப் பச்சன் நேராக மும்பை வந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி கட்டப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

தற்போது வலி இருப்பதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சகஜ நிலைக்குத் திரும்ப இன்னும் சில வாரங்கள் பிடிக்கும். எனவே அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். அத்தியாவசிய பணிகளை மொபைல் மூலம் மேற்கொண்டு வருவதாகவும், மூச்சுவிடவும், நடமாடவும் கஷ்டமாக இருக்கிறது" என்று தனது சோசியல் மீடியா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் மொபைல் மூலம் அமிதாப்பச்சனிடம் நலம் விசாரித்து வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்த ரசிகர்கள் சோசியல் மீடியா மூலம் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.