Published:Updated:

Amitabh Bachchan: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்; 80 வது பிறந்தநாளில் உற்சாகமான அமிதாப் பச்சன்!

ரசிகர்களை காண வந்த அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த ரசிகர்களை நள்ளிரவில் சந்தித்தார்.

Amitabh Bachchan: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்; 80 வது பிறந்தநாளில் உற்சாகமான அமிதாப் பச்சன்!

நடிகர் அமிதாப் பச்சன் தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த ரசிகர்களை நள்ளிரவில் சந்தித்தார்.

Published:Updated:
ரசிகர்களை காண வந்த அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 80வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேற்று இரவில் இருந்து மும்பை ஜுகுவில் இருக்கும் அமிதாப் பச்சனின் ஜல்சா இல்லத்தின் முன்பு கூடியிருந்தனர். அவர்கள் இரவு 12 மணியானதும் அவரது வீட்டிற்கு வெளியில் அமிதாப் பச்சனின் 80வது பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர். திடீரென அமிதாப் பச்சன் தனது வீட்டில் இருந்து வெளியில் வந்து ரசிகர்களைச் சந்தித்தார். தனது மகள் ஸ்வேதா பச்சன், நந்தா மற்றும் பேத்தி நவ்யா நந்தா ஆகியோருடன் வெளியில் வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையெடுத்து கும்பிட்டார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

திடீரென அமிதாப் பச்சன் வெளியில் வந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அனைவரும் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்றை ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை அதிகமான ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர். அமிதாப் பச்சன் இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தோடு கொண்டாடுகிறார். அவர் நடித்துள்ள குட்பை திரைப்படம் கடந்த 7ம் தேதிதான் திரைக்கு வந்துள்ளது. அமிதாப் பச்சனின் பிறந்தநாளையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் குட்பை படத்தை தியேட்டர்களில் ரசிகர்கள் ரூ.80க்கு கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1969ம் ஆண்டு பாலிவுட்டில் சாத் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் அறிமுகமான அமிதாப்பச்சன் தனது கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். இரண்டாவதாக ஆனந்த் என்ற படத்தில் நடித்தார். திரைப்படத்துறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாமல் அமிதாப்பச்சன் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

அவர் நடித்த படங்களும் சரியாகப் போகவில்லை. 1973ம் ஆண்டு அனைவரும் நடிக்க மறுத்த சன்ஜீர் என்ற படத்தில் அமிதாப் பச்சன் நடித்தார். அப்படம் அமிதாப் பச்சனுக்குப் பெரிய அளவில் பெயரை வாங்கிக்கொடுத்ததோடு பிலிம் பேர் விருதையும் பெற்றுக்கொடுத்தது. 1983ம் ஆண்டு கூலி படத்தில் நடித்தபோது மிகப்பெரிய அளவில் காயம் அடைந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அமிதாப் பச்சன் சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்கும் கம்பெனியை ஆரம்பித்து பெரிய அளவில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து எப்படி வெளியில் வரப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கோன் பனேகா குரோர்பதி என்ற டிவி நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. படிப்படியாக கடனை அடைந்ததோடு தனது 60 வயதுக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து பாலிவுட்டில் அசைக்க முடியாத நடிகராகத் திகழ்ந்தார். தனது வயதுக்கு ஏற்ற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று சொல்லி படங்களில் இப்போதும் நடித்து வரும் அமிதாப் பச்சன் அனைவரது மனதிலும் நிறைந்து நிற்கிறார்.