Published:Updated:

`பாலிவுட்டில் நட்சத்திரங்களை விற்கிறார்கள்' - நடிகர் அனுபம் கெர் குற்றச்சாட்டு

அநுபம் கெர்

அனுபம் கெர் தற்போது நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையமாக வைத்து எடுக்கப்படும் எமர்ஜென்சி படத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் வேடத்தில் நடிக்கிறார்.

`பாலிவுட்டில் நட்சத்திரங்களை விற்கிறார்கள்' - நடிகர் அனுபம் கெர் குற்றச்சாட்டு

அனுபம் கெர் தற்போது நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையமாக வைத்து எடுக்கப்படும் எமர்ஜென்சி படத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் வேடத்தில் நடிக்கிறார்.

Published:Updated:
அநுபம் கெர்
சமீப காலமாக பாலிவுட் படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான நடிகர் ஆமீர் கான் மற்றும் அக்‌ஷய் குமார் படங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால் தென்னிந்திய படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
அனுபம் கெர்
அனுபம் கெர்

இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாலிவுட் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் அளித்துள்ள பேட்டியில், தென்னிந்தியப் படங்கள் வசூலில் சாதனை படைப்பதற்கு தென்னிந்திய படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் பாலிவுட் படங்கள் பெரும்பாலும் நட்சத்திரங்களை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது. நீங்கள் பார்வையாளர்களுக்காகப் படங்களைத் தயாரிக்கிறீர்கள். பார்வையாளர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதபோதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. நாங்கள் சிறந்த படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தோம். அதனால் இப்போது சிறந்த படங்களை பார்க்கிறீர்கள். கூட்டு முயற்சியால் சாதிக்க முடியும் என்பதை தெலுங்கு படத்தில் நடித்தபோது கற்றுக்கொண்டேன். இப்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறேன். தமிழில் கூட படம் பண்ணி இருக்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாலிவுட்டையும், தென்னிந்திய படங்களையும் பிரித்துப் பார்க்கவில்லை. தென்னிந்திய படங்களில் கதையை சொல்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் நட்சத்திரங்களை விற்பனை செய்கிறார்கள் என்று தெரிவித்தார். அனுபம் கெர் தற்போது நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையமாக வைத்து எடுக்கப்படும் எமர்ஜென்சி படத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் வேடத்தில் நடிக்கிறார். இது தவிர நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.