Published:Updated:

`தரம் தாழ்ந்து சென்றிருக்கிறீர்கள்' காதலி மலைகா அரோரா குறித்த செய்தி; கொதித்த அர்ஜுன் கபூர்!

அர்ஜூன் கபூருடன் மலைகா

பாலிவுட் நடிகை மலைகா அரோரா குறித்து வெளியான செய்தியை கடுமையாக மறுத்து பதிவிட்டிருக்கிறார் அவரின் காதலர் அர்ஜுன் கபூர்.

`தரம் தாழ்ந்து சென்றிருக்கிறீர்கள்' காதலி மலைகா அரோரா குறித்த செய்தி; கொதித்த அர்ஜுன் கபூர்!

பாலிவுட் நடிகை மலைகா அரோரா குறித்து வெளியான செய்தியை கடுமையாக மறுத்து பதிவிட்டிருக்கிறார் அவரின் காதலர் அர்ஜுன் கபூர்.

Published:Updated:
அர்ஜூன் கபூருடன் மலைகா

பாலிவுட் நடிகை மலைகா அரோரா நடிகர் சல்மான் கான் சகோதரரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். அக்குழந்தையை இருவரும் சேர்ந்து கவனித்துக்கொள்கின்றனர். இந்நிலையில், தற்போது அரோரா நடிகர் அர்ஜூன் கபூரைக் காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே அதிக வயது வித்யாசம் இருந்தபோதிலும் இருவரும் தங்களது காதலை வெளியில் சொல்லிக்கொள்ளத் தயங்கியதில்லை. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் சேர்ந்தே கலந்து கொள்கின்றனர். ஆனால் இருவருக்கும் தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று அர்ஜூன் கபூர் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். தற்போது மலைகா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் சினிமா செய்தி வெப்சைட் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. மலைகாவும், அர்ஜூன் கபூரும் லண்டன் சென்றிருந்த போது தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பரிடம் கர்ப்பமாக இருக்கும் விசயத்தை மலைகா தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜுன் கபூர், மலைகா அரோரா
அர்ஜுன் கபூர், மலைகா அரோரா

ஆனால் இச்செய்தி உண்மையில்லை என்று மலைகாவின் குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார். இச்செய்தி வெறும் வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டார். நடிகர் அர்ஜூன் கபூரும் இச்செய்தியை கடுமையான மறுத்து தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அதில், பிரபல பாலிவுட் சினிமா செய்தி வெப்சைட் ஒன்றின் செய்தியைக் குறிப்பிட்டு "நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து சென்றிருக்கிறீர்கள். குப்பைச் செய்தியை சர்வசாதாரணமாக நேர்மையற்ற முறையில் வெளியிட்டு இருக்கிறீர்கள். இது போன்ற செய்தியை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மலைகா அரோராவும் இச்செய்தியை மறுத்துள்ளார்.

இந்நிலையில் அர்ஜுன் கபூர், இன்று மீண்டும் இந்த சர்ச்சையான செய்திகள் குறித்து, "கர்மா அனைவரையும் பின் தொடர்கிறது. நீங்கள் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. மக்களை ஏமாற்றும் உங்களின் இந்தச் செயலின் விளைகளில் இருந்து உங்களால் தப்பிக்க முடியாது. எதை அளிக்கிறோமோ அதுதான் நமக்குத் திரும்ப வரும். தாமதமாகவோ அல்லது விரைவாகவோ இந்த பிரபஞ்சம் நீங்கள் செய்த செயலுக்கானப் பலனைத் திருப்பித் தந்துவிடும்" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அர்ஜுன் கபூரின் இன்ஸ்டகிராம் ஸ்டோரி
அர்ஜுன் கபூரின் இன்ஸ்டகிராம் ஸ்டோரி

இதையடுத்து மலைகா அரோரா கர்ப்பம் என்ற செய்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தச் செய்தியை சம்பந்தப்பட்ட இணையத்தளம் தனது தளத்தில் இருந்து நீக்கிவிட்டது. இது பாலிவுட் வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் இதுபோன்ற தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதை பாலிவுட் செய்தி வெப்சைட்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாலிவுட் வட்டாரங்கள் கண்டித்து வருகின்றன.