Published:Updated:

"மன அழுத்தங்களும், தற்கொலை எண்ணங்களும் பல முறை எழுந்தன" - நடிகை தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

மனநல ஆரோக்கியம் பற்றி பேசிய தீபிகா படுகோன், 'அம்மா இருந்தா போதும் எல்லாப் பிரச்னையும் சரியாகிவிடும்...' என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

"மன அழுத்தங்களும், தற்கொலை எண்ணங்களும் பல முறை எழுந்தன" - நடிகை தீபிகா படுகோன்

மனநல ஆரோக்கியம் பற்றி பேசிய தீபிகா படுகோன், 'அம்மா இருந்தா போதும் எல்லாப் பிரச்னையும் சரியாகிவிடும்...' என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

Published:Updated:
தீபிகா படுகோன்
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் யோகா, உடற்பயிற்சி என உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பவர். அந்தவகையில் தீபிகா, சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மனநல ஆரோக்கியம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அவர், ஆரோக்கியம் சம்பந்தமாகப் பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டு தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் தன் பெற்றோரைச் சந்திப்பேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். மேலும் எவ்வளவு உயரங்களுக்குச் சென்றாலும் அமைதி வேண்டும் என்றால் அம்மாவிடம்தான் வரவேண்டும் என்பதைப்போலத் தன் அம்மாவுடனான மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றிப் பேசியிருந்தார்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

"இன்று நான் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் பல நேரங்களில் காரணம் தெரியாமல் உடைந்துபோய் நின்றிருக்கிறேன். மன அழுத்தங்களும், தற்கொலை எண்ணங்களும் பல முறை என்னுள் வந்திருக்கிறது. எப்போதெல்லாம் இதுபோன்ற எண்ணங்கள் வருகிறதோ அதிலிருந்து தப்பிக்க நன்றாகத் தூங்கிவிடுவேன். மேலும், என் பெற்றோர் பெங்களூரில் வசிக்கிறார்கள், அடிக்கடி என்னைச் சந்திக்க வருவார்கள். அப்போது அவர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக நான் சோகமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்வேன். அவர்கள் என் உடன் இருக்கும் போது எனக்குத் தைரியம் வந்துவிடும். அவர்கள் ஊருக்குத் திருப்பும்போது மீண்டும் உடைந்து விடுவேன். அப்போது அம்மா என்னை அழைத்து என்ன நடந்தது?, நண்பர்களிடம் ஏதும் பிரச்சனையா?, வேலை செய்யும் இடத்தில் பிரச்சனையா?, காதலனுடன் ஏதும் பிரச்சனையா? என்று கேட்பார்.

அதற்கு என்னிடம் பதில்கள் இருக்காது. ஆனால் அவர் என்னைப்பற்றி புரிந்துகொள்வார். அந்தசமயத்தில் கடவுள்தான் சரியான நேரத்தில் இவர்களை அனுப்பினார் என்று எண்ணிக்கொள்வேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.