Published:Updated:

``சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றினால் இதுதான் நடக்கும்" - ஆதங்கப்பட்ட நடிகை கஜோல்

கஜோல்

நடிகர்கள் சிலர் பாதி நேரம் சினிமா திரையிலும் மீதி நேரம் சமுக வலைதளங்களிலும் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நான் அவர்களை விமர்சிக்கவில்லை - கஜோல்

``சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றினால் இதுதான் நடக்கும்" - ஆதங்கப்பட்ட நடிகை கஜோல்

நடிகர்கள் சிலர் பாதி நேரம் சினிமா திரையிலும் மீதி நேரம் சமுக வலைதளங்களிலும் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நான் அவர்களை விமர்சிக்கவில்லை - கஜோல்

Published:Updated:
கஜோல்
பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் 'மின்சாரக் கனவு' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி -2 படத்தில் நடிந்திருந்தார். தமிழில் இரண்டு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு.
கஜோல்
கஜோல்

இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். ஆனால் சமீபகாலமாக சொற்பமான சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமூக வலைத்தளப் பக்கங்களில் அவ்வப்போது மட்டுமே பதிவிடுவார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களைப் பதிவிட்டு வரும் கஜோல், இதுவரை 732 பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார். ஆனால் அவருக்கு கிட்டத்தட்ட 12.6 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். எப்போதாவது இன்ஸ்டாகிராம் பக்கம் வரும் கஜோலுக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளம் உள்ளனரா? என்று திரையுலகில் பலருக்கும் வியப்பாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஜோல்
கஜோல்

இது பற்றிக் கூறிய கஜோல், "ரசிகர்கள் நடிகர்களை பிரத்யேகமாக திரையில் பார்த்தால்தான் நடிகர்களின் மதிப்பு கூடும். சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றினால் அவர்களுக்கான மதிப்பு குறைந்துவிடும். முன்பெல்லாம் சினிமா திரையில் தோன்றியவர்கள் மட்டுமே பிரபலமாக இருந்தார்கள். ஆனால் இப்போது சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. இப்போது நீங்கள் வித்தியாசமாக எதைச் செய்தாலும் பிரபலமாகலாம். ஏன் உங்கள் தலைமுடி, நகங்கள் போன்றவற்றை வைத்துக்கூட பிரபலமாகிவிடலாம். பெரும்பாலான மக்கள் 24 மணிநேரமும் கிட்டத்தட்ட தங்கள் முழு வாழ்க்கையையும் சமூக ஊடகங்களிலேயே செலவிடுகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடிகர்கள் சிலர் பாதி நேரம் சினிமா திரையிலும் மீதி நேரம் சமுக வலைதளங்களிலும் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நான் அவர்களை விமர்சிக்கவில்லை. நிறைய நேரங்களை செலவிட்டு ரசிகர்களுக்காக நிறைய புகைப்படங்களை பதிவிடுவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் அதேசமயம் ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த நடிகர்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பார்த்தல் பிறகு எப்படி திரையில் தோன்றும்போது பார்ப்பார்கள் என்பதுதான் இதிலுள்ள பிரச்னை. இது போன்ற விஷயங்கள் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்தை நீர்த்துபோகச் செய்துவிடும். இதன் காரணமாகத்தான் நான் அதிகமான நேரம் சமூகவலைதளங்களில் செலவிடுவதில்லை" என்றார்.