பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனருமான நசிருதீன் ஷா, அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தான் ஓனோமடோமேனியா (onomatomania) என்ற நோயினால் அவதிப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார். மேலும் ‘நான் ஒன்றும் கேலி செய்யவில்லை. இது ஒரு மருத்துவ நிலை. வேண்டுமென்றால் அகராதியில் நீங்கள் தேடி பாருங்கள்’ என்றும் ஓனோமடோமேனியா என்பது ஒரு நோயாகும். அதில் நீங்கள் ஒரு வார்த்தையை அல்லது ஒரு சொற்றொடரை எந்தக் காரணமும் இல்லாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். நீங்கள் அதை கேட்க விரும்பாவிட்டாலும், நான் அதை எல்லா நேரத்திலும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

நசிருதீன் ஷா அண்மையில் தீபிகா படுகோன் நடித்த 'Gehraiyaan' எனும் படத்தில் நடித்திருந்தார். தற்போது தன் மனைவியுடன் சேர்ந்து நிறைய புத்தகங்களை பட்டியலிட்டு வைத்திருப்பதாகவும், எப்போதாவது அந்த புத்தகங்களை எடுத்து படித்து வருவதாகவும் கூறினார். மேலும் டின் டின் எனும் காமிக் புத்தகம் இருவருக்கும் பிடித்த புத்தகம் என்றும் நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.