Published:Updated:

தசரா பண்டிகை: ராவணன் உருவத்தை எரிக்கும் `ஆதிபுருஷ்' பிரபாஸ் - திரௌபதி முர்மு, கெஜ்ரிவால் பங்கேற்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நடிகர் பிரபாஸ்

'ஆதிபுருஷ்' படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெறும் தசரா பண்டிகையில் கலந்து கொள்கிறார் நடிகர் பிரபாஸ்.

Published:Updated:

தசரா பண்டிகை: ராவணன் உருவத்தை எரிக்கும் `ஆதிபுருஷ்' பிரபாஸ் - திரௌபதி முர்மு, கெஜ்ரிவால் பங்கேற்பு!

'ஆதிபுருஷ்' படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெறும் தசரா பண்டிகையில் கலந்து கொள்கிறார் நடிகர் பிரபாஸ்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நடிகர் பிரபாஸ்
ராமாயணத்தின்படி ஸ்ரீ ராமர், ராவணனை வென்று அயோத்திக்குத் திரும்பிய வெற்றியைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவதுதான் வட இந்தியாவின் தசரா பண்டிகை. இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் வெவ்வேறு விதமாகக் கொண்டப்படும் இந்தத் திருவிழா வடமாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 தசரா பண்டிகை
தசரா பண்டிகை

அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை 'தசரா பண்டிகை' செங்கோட்டை மைதானத்தில் கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகையின் நிறைவு நாளான இன்று இராவணன், கும்பகர்ணன் போன்றவர்களின் உருவ பொம்மையை வில் அல்லது தீப்பந்தம் மூலம் கொளுத்துவது வழக்கம்.

'பாகுபலி' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான தென்னிந்திய நடிகரான பிரபாஸ் இன்று நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இராவணன் உருவ பொம்மை எரித்து விழாவைச் சிறப்பிக்க உள்ளதாக விழாவை நடத்தும் லவ் குஷ் (Lav Kush) ராம்லீலா கமிட்டியினர் தெரிவித்திருந்தனர். அதன்படி நடிகர் பிரபாஸ் இன்று மாலை இராவணன் உருவ பொம்மை எரித்து விழாவை சிறப்பிக்க இருக்கிறார். இந்த கோலாகலமான நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆதிபுருஷ், பிரபாஸ் - சைஃப் அலி கான்
ஆதிபுருஷ், பிரபாஸ் - சைஃப் அலி கான்
நடிகர் பிரபாஸ் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் `ஆதிபுருஷ்' படத்தில் ஸ்ரீ ராமர் வேடத்தில் நடிக்கிறார். இதையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அயோத்தியில் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடந்து தற்போது படத்தின் புரொமோஷனின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெறும் இந்த தசரா பண்டிகையில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.