Published:Updated:

`மகளுடன் அதிக நேரத்தை செலவிடப்போகிறேன்!' நடிப்புக்கு தற்காலிகமாக பிரேக் கொடுக்கும் ரன்பீர் கபூர்

மகளுடன் ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்புக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

Published:Updated:

`மகளுடன் அதிக நேரத்தை செலவிடப்போகிறேன்!' நடிப்புக்கு தற்காலிகமாக பிரேக் கொடுக்கும் ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்புக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

மகளுடன் ரன்பீர் கபூர்
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இப்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஏற்கனவே குழந்தை பிறந்த நேரத்தில் ரன்பீர் கபூர் நடிப்பிலிருந்து சில நாட்கள் விலகியிருந்தார்.

அவர் தன் மகள் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார். எனவே மகளுடன் அதிகமான நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளார். இதற்காக நடிப்புக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பணத்துக்காக எந்த படத்திலும் நடிக்க விரும்பவில்லை.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

தற்போது நடித்து வரும் அனிமல் படத்திற்கு பிறகு நடிப்புக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். இப்போதுதான் தந்தையாகி இருக்கிறேன். எனவே இந்த பிரேக் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பிரேக் நேரத்தில் எனது மகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன். எனக்கு விருப்பம் இல்லாவிட்டால் பணத்திற்காக மட்டும் படங்களில் நடிக்கும் நடிகராக இருக்கமாட்டேன். நான் திரைப்படத்துறைக்கு வந்து 16 வருடங்கள் ஆகிவிட்டன. இதில் உத்வேகத்துடனும், அன்புடனும் பணியாற்ற விரும்புகிறேன். பிரமாஸ்திரா 2 மற்றும் 3 பண்ண இருக்கிறோம்.

அதற்கான கதையை இயக்குநர் அயன் முகர்ஜி எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரமாஸ்திரா 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூர் 5 மாதம் பிரேக் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். இந்த 5 மாதத்தில் அதிகமான படக்கதைகளை படிக்க முடிவு செய்துள்ளார். அதோடு மனைவி ஆலியா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் மகள் ராஹாவுடன் கணிசமான நேரத்தை செலவிடவும் திட்டமிட்டு இருக்கிறார்.