Published:Updated:

`ஆலியா பட்டுடன் திருமணமா...' - நடிகர் ரன்பீர் கபூர் பதில்!

ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் தற்போது பிரமஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

`ஆலியா பட்டுடன் திருமணமா...' - நடிகர் ரன்பீர் கபூர் பதில்!

நடிகர் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் தற்போது பிரமஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

Published:Updated:
ரன்பீர் கபூர்

நடிகை ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து காதலித்து வருகின்றனர். சோனம் கபூர் திருமண நிகழ்ச்சியில்தான் ஆலியாவும் ரன்பீர் கபூரும் ஜோடியாகக் கலந்துகொண்டனர். திருமணம் தொடர்பாக ஆலியா பட் ஏற்கெனவே அளித்திருந்த பேட்டியில், தான் நீண்ட நாட்களுக்கு முன்பே ரன்பீர் கபூரை எனது தலையில் திருமணம் செய்து கொண்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார். கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் திருமணம் நடந்திருக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ரன்பீர் கபூர் தன் தந்தையின் கடைசி படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, "ஒருவர் எப்போது ஆலியாவுடன் திருமணம் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரன்பீர் கபூர், அது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்க முடியாது. நானும், ஆலியாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருக்கிறோம். விரைவில் என்றால் அடுத்த மாதமா என்று கேட்டதற்கு, தேதியைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

ஆலியா பட்
ஆலியா பட்

ரன்பீர் கபூர் அத்தை ரிமா ஜெயின் இது குறித்து கூறுகையில், "ஆலியாவும், ரன்பீரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் எப்போது என்று தெரியாது. எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் திருமணம் குறித்து முடிவு செய்து விரைவில் அறிவிப்பார்கள். திருமணத்திற்கு நாங்கள் எந்த வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி திடீரென திருமணம் நடக்கும். திருமணம் தொடர்பான செய்தி உண்மையெனில் அது எங்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகவே இருக்கும். திருமணம் நடக்கும். ஆனால் எப்போது என்று தெரியாது" என்று தெரிவித்தார். ஆனால் இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism