பாலிவுட்டில் நடிகர் ரன்திர் கபூர் கடந்த 34 ஆண்டுகளாக தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். ஆனால் இதுவரை ரன்திர் கபூரோ அல்லது அவரின் மனைவி பபிதாவோ விவாகரத்து வேண்டும் என்று கேட்டு கோர்ட் படியேறவில்லை. கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்கின்றனர். ரன்திர் கபூர் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை பபிதாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 1969-ம் ஆண்டுதான் முதல் முறையாக ரன்திர் கபூர் பபிதாவை `சங்கம்' படத்தின் படப்பிடிப்பில் சந்தித்தார். தனது தந்தை ராஜ்கபூருடன் ரன்திர் படப்பிடிப்புக்கு சென்றபோது இந்த சந்திப்பு நடந்தது. அதன்பிறகு படிப்படியாகத் தங்களது நட்பை வளர்த்துக்கொண்டனர். யாருக்கும் தெரியாமல் இருவரும் நட்பை வளர்த்து வந்தனர். அதுவே நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் கபூர் குடும்பத்திற்குத் தெரியவந்தது. உடனே ராஜ்கபூர் தனது மகனிடம் பபிதாவை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு ரன்திர் சரியாக பதிலளிக்கவில்லை. "ஏன்டா? இப்போது திருமணம் செய்யவில்லையெனில் பபிதா வயதான பிறகா திருமணம் செய்யப்போகிறாய்" என்று ராஜ்கபூர் கேட்டார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரன்திர் கபூர் தனது காதலை நேரடியாக பபிதாவிடம் தெரிவிக்கவில்லை. அந்தக் காதலை ரன்திர் கபூர் சார்பாக அவரின் பெற்றோர்தான் பபிதாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து 1971-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.
குடிபழக்கத்திற்கு ஆளான ரன்திர்
திருமணத்திற்குப் பிறகு பபிதா தனது நடிப்பைக் கைவிட்டார். இருவரது வாழ்க்கையும் எந்தவித பிரச்னையும் இல்லாமல்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் ரன்திர் கபூர் படங்கள் தொடர்ந்து சரியாக ஓடாததால் அவரது திரைப்பட வாழ்க்கையில் ஒரு சரிவு ஏற்பட்டது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத ரன்திர் கபூர் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அதிக அளவில் மது அருந்திவிட்டு விட்டு வீட்டிற்கு இரவு அதிக நேரம் கழித்து வர ஆரம்பித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. தன் கணவர் குடித்துவிட்டு வருவதை பபிதாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதுகுறித்து ரன்திர் கபூர் ஒரு பேட்டியில் கூறுகையில், "நான் குடித்துவிட்டு வருவதை பபிதா விரும்பவில்லை. நான் குடித்துவிட்டு வரும்போது அவருக்கு நான் கொடூரமானவனாக தெரிந்தேன். பபிதா விரும்புவதுபோல் என்னால் வாழப் பிடிக்கவில்லை. அதேசமயம் என்னை அவரால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நாங்கள் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்தோம். எங்களுக்கு இரண்டு அழகான பெண் குழந்தைகள் இருக்கின்றன. அவற்றை பபிதா வளர்த்தெடுத்தார் என்று தெரிவித்தார்.

விவாகரத்து கோராத தம்பதி
இருவரும் 1988-ம் ஆண்டு முதல் தனியாகப் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். 34 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் அனைத்து குடும்ப நிகழ்ச்சியிலும் குடும்பம் சகிதமாகக் கலந்துகொள்வதோடு புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றனர். நடிகை கரீனா கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோர் அடிக்கடி தங்களது தந்தையை சென்று பார்த்துக்கொள்கின்றனர். இத்தனை ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தாலும் ஏன் விவாகரத்து கோரவில்லை என்று ரன்திர் கபூரிடம் கேட்டதற்கு, எதற்காக விவாகரத்து? நாம் ஏன் விவாகரத்து செய்யவேண்டும். நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் திட்டமில்லை. அதே போன்று பபிதாவும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. பிறகு ஏன் விவாகரத்து செய்யவேண்டும் என்று கேட்டார்.