Published:Updated:

ரூ.119 கோடி; 19 கார் பார்கிங் வசதி; அரபிக் கடலுக்கு அருகில் ரன்வீர் சிங் - தீபிகாவின் புதிய வீடு!

ரன்வீர் சிங் - தீபிகா

நடிகர் ரன்வீர் சிங் மும்பையில் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் ரூ.119 கோடிக்கு புதிய வீடு வாங்கி இருக்கிறார்.

ரூ.119 கோடி; 19 கார் பார்கிங் வசதி; அரபிக் கடலுக்கு அருகில் ரன்வீர் சிங் - தீபிகாவின் புதிய வீடு!

நடிகர் ரன்வீர் சிங் மும்பையில் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் ரூ.119 கோடிக்கு புதிய வீடு வாங்கி இருக்கிறார்.

Published:Updated:
ரன்வீர் சிங் - தீபிகா
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனேயை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ரன்வீர் சிங் மும்பை பாந்த்ராவில் கடற்கரை அருகில் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் ரூ.119 கோடியில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

19 கார்களை பார்க்கிங் செய்வதற்கான உரிமையையும் சேர்த்து வாங்கியிருக்கும் ரன்வீர் தனது தந்தை ஜுக்ஜீத் சுந்தர் சிங்குடன் சேர்ந்த இந்த வீட்டைத் தனது கம்பெனி பெயரில் பதிவு செய்திருக்கிறார். பாந்த்ரா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் சாகர் ரேசம் என்ற கட்டிடத்தில் 16வது மாடியிலிருந்து 19 வது மாடி வரை ஒவ்வொரு மாடியிலும் ஒரு வீடு வீதம் வாங்கி இருக்கிறார். நான்கு மாடியில் இருக்கும் வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும். இந்த வீட்டை வாங்குவதற்கான பத்திரப்பதிவு கடந்த 8ம் தேதி நடந்துள்ளது.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

பத்திரப்பதிவின் போது ஆவணங்களில் ரன்வீர் சிங் தந்தை கையெழுத்திட்டுள்ளார். இதற்காக முத்திரைத் தீர்வையாக 7.13 கோடியை ரன்வீர் சிங் அரசுக்கு செலுத்தி இருக்கிறார். வீட்டின் மொத்தப்பரப்பு 11,266 சதுர அடியாகும். இதுதவிர 1300 சதுர அடி மாடிப்பகுதியும் அடங்கும். ஒரு சதுர அடி ரூ.1.05 லட்சம் என்ற கணக்கில் ரன்வீர் சிங் இந்த வீட்டை வாங்கி இருக்கிறார் என்கின்றனர். ஏற்கெனவே இருந்த பழைய கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கீழ் தளத்தில் ஏற்கெனவே பழைய கட்டடத்தில் வசித்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் மேல் மாடிகளில் இருந்து அரபிக்கடலை மிகவும் அருமையாக கண்டுகளிக்க முடியும். ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனேயுடன் புதிய வீடு கட்டப்படும் இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளார்.