Published:Updated:

Ranveer Singh சர்ச்சை போட்டோஷூட்: வைரலாகும் படங்கள் - ரசிகர்கள் கமென்ட்!

ரன்வீர் சிங்

சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Ranveer Singh சர்ச்சை போட்டோஷூட்: வைரலாகும் படங்கள் - ரசிகர்கள் கமென்ட்!

சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published:Updated:
ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி அவ்வப்போது வித்தியாசமான ஆடைகள் அணிந்து போட்டோஷுட் எடுப்பது அவரின் வழக்கம். ரன்வீர் சிங் தற்போது பத்திரிகை ஒன்றுக்காக நிர்வாணமாக போட்டோஷுட் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் ரன்வீர் சிங்கின் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. தனது பேட்டியில், திரைப்படம், பேஷன் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ரன்வீர் சிங்கின் இந்தப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோனே இப்படத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது ஆச்சர்யம் என ஒரு ரசிகர் தெரிவித்திருந்தார். இதே பத்திரிகையில் இதற்கு முன்பு பல ஹாலிவுட் நடிகைகள் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது ரன்வீர் சிங் இடம் பெற்று இருக்கிறார்.இது ரன்வீர் சிங்கின் துணிச்சலான முடிவு எனவும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். தீபிகா படுகோனேயும், ரன்வீர் சிங்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!