Published:Updated:

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம் வாங்கினேனா? - கொதித்த சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கான் சம்பாதித்துவிட்டார் என்ற செய்தி வருமான வரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் செல்லும்.அவர்களும் நோட்டீஸ் அனுப்புவார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம் வாங்கினேனா? - கொதித்த சல்மான் கான்

சல்மான் கான் சம்பாதித்துவிட்டார் என்ற செய்தி வருமான வரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் செல்லும்.அவர்களும் நோட்டீஸ் அனுப்புவார்கள்.

Published:Updated:
சல்மான் கான்

இந்தி உட்பட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இந்தியில் 12 ஆண்டுகளாக நடிகர் சல்மான் கான் இதனை நடத்தி வருகிறது. இந்தியில் பிக்பாஸ் 16 அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து தொடங்க தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடத்த சல்மான் கான் ஆயிரம் கோடி கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை அறிமுகப்படுத்தும் விழாவில் இதற்கு விளக்கம் அளித்தார். இதில் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கவுஹர் கானுடன் நடிகர் சல்மான் கான் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் தான் தனது சம்பளம் குறித்த விவரங்களை சல்மான் கான் தெளிவுபடுத்தினார். நான் ஆயிரம் கோடி கட்டணம் வசூலித்தால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாம். ஆயிரம் கோடி கிடைக்கும் என வதந்தி பரவியதால் கிடைக்காத அந்த பணத்தை திரும்ப கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதன் மூலம் கலர்ஸ் டிவி பயனடையும்.

சல்மான் கான்
சல்மான் கான்

இந்த அளவுக்கு கட்டணம் வசூலித்தால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகையான செலவுகளும் அதிகமாகும். சல்மான் கான் சம்பாதித்துவிட்டார் என்ற செய்தி வருமான வரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் செல்லும்.அவர்களும் நோட்டீஸ் அனுப்புவார்கள். இதில் உண்மை தெரிய வரும். எனது சம்பளம் மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இந்த விளையாட்டு எனக்குப் பிடித்திருக்கிறது. இதில் பலரை சந்திக்க முடிகிறது. நான்கு மாதத்தில் அவர்களோடு ஒரு பந்தத்தை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. இதற்கு முன்பு நடந்தத்தில் இருந்து இப்போது நடக்கும் பிக்பாஸ் சற்று மாறுபட்டிருக்கிறது. வித்யாசமான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டால் போட்டியில் சரியான முறையில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். கடைசியாக நடந்த பிக்பாஸில் நடிகை தேஜஸ்வி பிரகாஷ் வெற்றி பெற்றார்.