Published:Updated:

பாதுகாப்பு அச்சுறுத்தல்: துப்பாக்கி லைசென்ஸ்; குண்டு துளைக்காத கார்; தற்காப்பில் சல்மான் கான்

சல்மான் கான் மற்றும் குண்டு துளைக்காத கார்

எந்நேரமும் நிழலாகப் பின் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு சல்மான் கான் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பணியில் நியமித்திருக்கிறார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்: துப்பாக்கி லைசென்ஸ்; குண்டு துளைக்காத கார்; தற்காப்பில் சல்மான் கான்

எந்நேரமும் நிழலாகப் பின் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு சல்மான் கான் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பணியில் நியமித்திருக்கிறார்.

Published:Updated:
சல்மான் கான் மற்றும் குண்டு துளைக்காத கார்
நடிகர் சல்மான் கானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்தது. பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவை கொலை செய்த லாரன்ஸ் பிஸ்னோய் சிறையில் இருந்து கொண்டே தனது ஆட்கள் மூலம் இக்கொலை மிரட்டல் கடிதத்தை அனுப்பி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து நடிகர் சல்மான் கான் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி தனக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று கோரி விண்ணப்பித்திருந்தார். மும்பை போலீஸாரும் சமீபத்தில் அவருக்குத் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியுள்ளனர். சல்மான் கான் தனது பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக குண்டு துளைக்காத கார் ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

சல்மான் கானின் குண்டு துளைக்காத கார்
சல்மான் கானின் குண்டு துளைக்காத கார்

அந்த காரில்தான் சல்மான் கான் நேற்று இரவு விமான நிலையத்திற்கு வந்தார். வெள்ளை கலர் குண்டு துளைக்காத காரை இப்போது எங்கு சென்றாலும் சல்மான் கான் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். அதோடு சல்மான் கானின் பாதுகாப்புக்கு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர சல்மான் கானின் தனிப்பட்ட பாதுகாவலர்களும் எந்நேரமும் நிழலாக பின் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு சல்மான் கான் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பணியில் நியமித்திருக்கிறார்.

அதோடு சல்மான் கான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் சல்மான் கான் வீடு மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஸ்னோய் மூலம் இதற்கு முன்பும் சல்மான் கானுக்கு மிரட்டல் வந்திருக்கிறது. ஆனால் அதனை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது பஞ்சாப் பாடகர் கொலையில் பிஸ்னோய் பெயர் அடிபடுவதால் சல்மான் கான் தனது பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.