Published:Updated:

தன் சகோதரர்களுடன் இணைந்து புதிய படம்; நடிகர் சல்மான் கானின் திட்டம்!

கான் சகோதரர்கள்

நடிகர் சல்மான் கான் விரைவில் தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

தன் சகோதரர்களுடன் இணைந்து புதிய படம்; நடிகர் சல்மான் கானின் திட்டம்!

நடிகர் சல்மான் கான் விரைவில் தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

Published:Updated:
கான் சகோதரர்கள்

நடிகர் சல்மான் கானுக்கு சோஹைல் கான், அர்பாஸ் கான் ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். மூவருமே சினிமா சார்ந்த பணிகளில் தான் இருக்கின்றனர். ஆனால் சகோதரர்கள் மூன்று பேரும் இணைந்து நடித்தது கிடையாது. இரண்டு சகோதரர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். `காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சகோதரர்களும் இணைந்து கலந்து கொண்டதுண்டு. தற்போது சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பான Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சல்மான் கான்
சல்மான் கான்

அர்பாஸ் கான் வெப் சீரியஸ் தயாரித்து வருகிறார். சோஹைல் கான் படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் சகோதரர்கள் மூன்று பேரும் இணைந்து படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். இத்தகவலை அர்பாஸ் கான் உறுதிபடுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அர்பாஸ் கான் அளித்துள்ள பேட்டியில், ``சகோதரர்கள் எங்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் பணி தொடர்பானதாகவே இருக்கும். நாங்கள் சந்தித்துக்கொள்ளும் போது படப்பிடிப்பு எப்படி போகிறது, இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கிறது, படம் எப்போது ரிலீஸ் ஆகிறது, என்ன பாடல்கள் இடம் பெறுகிறது என்றுதான் பேசிக்கொள்வோம்.

ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் படம் பற்றி பேசிக்கொள்வோம். அதிகமான நேரங்களில் நாங்கள் அடுத்து என்ன பண்ணப்போகிறோம் என்பது பற்றி எங்களது சகோதரர்களுக்குத் தெரிந்திருக்காது. விரைவில் மூன்று பேரும் இணைந்து படம் ஒன்றில் நடிக்க இருக்கிறோம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான வாய்ப்புக்கள் வரும் போது அதனைப் பயன்படுத்திக்கொள்வோம் என்று தெரிவித்தார். சல்மான் கானும், சோஹைல் கானும் இணைந்து மைனே பியார் குயின் கியா படத்தில் நடித்துள்ளனர். இதில் அர்பாஸ் கான் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் இதில் மூன்று பேரும் ஒரே சமயத்தில் திரையில் தோன்றியதில்லை.