Published:Updated:

நடிகர் சல்மான் கானுக்கு படங்களில் டூப்பாக நடித்தவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மரணம்!

சல்மான் கானுடன் சாகர்

நடிகர் சல்மான் கானுக்கு படங்களில் டூப்பாக நடித்தவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.

நடிகர் சல்மான் கானுக்கு படங்களில் டூப்பாக நடித்தவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மரணம்!

நடிகர் சல்மான் கானுக்கு படங்களில் டூப்பாக நடித்தவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.

Published:Updated:
சல்மான் கானுடன் சாகர்

திரைப்படங்களில் பெரிய நடிகர்களுக்கு அவர்களைப் போன்ற முகத்தோற்றம் கொண்டவர்கள் சண்டைக்காட்சிகளில் டூப்பாக நடிப்பது வழக்கம். பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானுக்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் டூப்ளிகேட்டாக நடித்தவர் சாகர் பாண்டே. இதேபோன்று நடிகர் ஷாருக் கானுக்கு பிரசாந்த் வால்டே என்பவர் டூப்பாக நடித்து வருகிறார். மும்பையில் சாகர் பாண்டே நேற்று ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்நேரம் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவர் உடனே ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியில் இருக்கும் பாலா சாஹேப் தாக்கரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலை முதலில் ஷாருக் கானின் டூப் பிரசாந்த் வால்டேதான் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

சல்மான் கானுடன் சாகர் பாண்டே
சல்மான் கானுடன் சாகர் பாண்டே

சாகருக்கு 50 வயதுக்குள் தான் இருக்கும் என்றும், மிகவும் உடல் தகுதியுடன் இருந்ததாகவும், அவரது மரணம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்று பிரசாந்த் தெரிவித்திருந்தார். சாகரின் மரணம் நடிகர் சல்மான் கானையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இது தொடர்பாக சல்மான் கான் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு அதோடு பஜ்ரங்கி பைஜான் படப்பிடிப்பில் சாகர் பாண்டேயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுதவிர நடிகர் அனுபம் கெர், நடிகை சங்கீதா பிஜ்லானி உட்பட பலரும் சமூக வலைதளத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி காமெடி நிகழ்ச்சிகளை நடத்தும் ராஜூ ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்தார். அவருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.